பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6S இருமையும் இன்பந் தருவது ஆகவே அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோல், இடர் உற்றபோது நீங்கும் வண்டனையாரோடு இணங்காது இணை பிரியாத இயல்பு அமைந்த கொடியன்னரைத் துணையாகக் கோடலே இருமையும் இன்பம் தருவதாகும் என்னும் உண்மை இனிதறியப்படும். அருஞ்சொற்பொருள் : வம்பு - மனம்; கொம்பு - கிளே; கோலம் - அழகு; பிள்ளைப் பெருமான் - திருஞானசம்பந்தர்: மஞ்சு - மேகம்; மாந்தி - பருகி; சவி - அழகு, திரை - அலை; வெம்மை - கொடுமை, காலாடுபோழ்து - செல்வம் மிகுந்த காலத்து; ஏலா - பொருந்தாத பொறி - கல்வினை: ஏத்தும் - புகழ்கின்ற, நீப்பர் - விடுவர்; அரங்கிய - பொருந்திய, 4 வினுக்கள் : 1. ஓங்கி வளர்ந்த வேங்கையின் காட்சியை விளக்குக. 2. வண்டும் பற்றிப் படர்ந்துள்ள பைங்கொடியும் நமக்கு அறிவுறுத்தும் உண்மைகள் யாவை ? தனித்தனியே விளக்குக. 3. இராமன் சீதையிடம் கூறிய செய்தி யாது ? 4. சீதையின் நெஞ்சினை நஞ்சுபோல் நலிவுறுத்தியது எது? 5. சீதை எதற்குச் சான்ருய் இலங்குகின்ருள் ? 6. நளன் தமயந்தியிடம் கூறியது யாது ? அதற்கு அவள் கூறிய மாற்றம் யாது ? 7. கண்ணகியின் பெருமையைச் சிலப்பதிகாரம் எங்ங்னம் எடுத் துரைக்கின்றது ? 8. கண்ணகியைக் கோவலன் எங்ங்னம் பாராட்டின ன் ? 9. குலமாதர் நெறியைக் கொடியின் தன்மையோடு ஒப்பிட்டுக் கம்பர் கூறுங்தன்மையை விளக்குக. 10. இருமையும் இன்பந்தருவது எது ?

- = -==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/79&oldid=881281" இலிருந்து மீள்விக்கப்பட்டது