உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும் பகுதி-காதல் 9.7 காதலன் : புத்துருக் கோயிலிலே பூவாகப் பூத்தாலும் புத்துரு ஆண்டி போலே பூத்தொடுப்பேன் அப்பூவை. காதலி : புத்துரு கோயிலிலே பூத்தொடுத்த பூ எடுத்து சோ?ல சாமி கோயிலிலே சொகுசாக நுழைவேண்டா. (சேகரித்தவர்-எஸ். எஸ். போத்தையா; 33. புறப்படுவோம் முறை மணமக்களிருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிருர்கள். குடும்பத் தகராறு காரணமாக அவர்களது பெற்ருேர் திருமணத்திற்கு இசைவு தரவில்லை. அவர்களிருவரும் மதுரை சென்று பெற்ருேர் அறியாமலே மணம் செய்து கொள்ள முடிவு செய்கிருர்கள். முன்னேற்பாட்டின்படி ஊருக்கு வெளியி லுள்ள நந்தவனத்திற்கு மணமக்கள் வருகிருள். யாரையும் காணு மல் அவர்கள் பாடிக்கொண்டே கோவில்பட்டி ரயில் கிலேயத்திற் குச் செல்கிருர்கள். அவர்களது வழிநடைப் பாட்டே இப்பாடல், காதலன் : பலாப்பழமே எந்தன் பழம் பறிக்கும் செண்பகமே! வாலேப் பசுங்கிளியே வந்திருவாய் இந்த கேரம். குண்டுமல்லி குடகுமல்லி கோதையரே ஊசிமல்லி கண்டவுடன் ஆசைப்படும் கன்னியரே சாதிமல்லி. கந்திய வட்டப் புஷ்பம் நறுமணம் கொண்ட புஷ்பம் இன்பமுள்ள இருவாட்சி ஏந்திழைமார் வாங்கும் புஷ்பம்.