பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம் திரீஇயின னென்று கருதி யரசன் மீது கோபங்கொண்டு புகழேந்தியாரைச் சிறை நீக்க வெண்ணித் தன் தலைவன் பள்ளியறைக்குப் போ தரும் போது தானுள் ளே யிருந்து கதவினைத் தாழிட்டாள். அஃதுணர்ந்த வண்ணல் அவளைப் பலவாறு வேண்டியுங் கதவு திறவாமையால் அவளது உடைற ணிப்பா னொட்டக் கூத்தப் புலவசை யுய்த்தனன். அவர் சென்று, ( நானே யினியுன்னை வேண்டுவ தென்கொ னளின மலர்த் தேனே கவாடர் திறந்திடு வாய்திற வாவிடிலோ வானே றனைய விரலி குலாதிபன் வாயில் வந்தாற் ஐானே திறக்குநின் கைத்தல மாகிய தாமரையே,” என்று பாடியவளவில் அது கடுமையாயிருந்தமை குறித்து, அவள் “ஒட்டக் கூத்தர் பாட்டுக் கிரட்டைத் தாழ்ப்பாள்,' என்று மொழிந்து முன்னினும் பலமாகத் தாழிட்டாள். இது செவிசாத்திய சோழர்பிரான், 'புகழேந்திப் புலவரையாம் நெடுநாளாகச் சிறையகத்திட்டு வருத்தியமையால் நம் தேவிக்கு உடலுண்டாயிற்று, என்று உய்த்துணர்ந்துகொண்ட வக்கணமே புகழேந் கிப் புலவரைச் சிறை நீக்கி யாசியின் பிணக்கத் தணிக்குமா றேவலும், அவர் அந்தப்புரஞ் சென்று பள்ளியறை யருகர் நின்று, "இழையொன் றிரண்டு வகிர் செய்த அண்ணாடை யேந்திபபொற் குழையொன் றிரண்டு விழியணக் கேகொண்ட கோபத்தணி மழையொன் றிரண்டுகைம் மானா பரணனின் வாயில் வந்தாற் பிழைபொன் றிரண்டு பொறுசோ குடியிற் பிறந்தவரே," . 20 என்று பாடலுங் கேட்ட. இராசமாதேவி யுடனே மகிழ்ச்சியடைந்து ஊட லொழிந் து கதவந்திறந்தனள். அன்று தொட்டுப் புகழேந்திப் புலவர்க்கு நற் கரலம் பிறந்தது ; சோழராசனு மவரை யுன்புடன் பாராட்டி வந்தான். ஆயினும் அவர், தம்மைக்கண்டு ஒட்டக்கூத்தருக்கு அழுக்காறு முதிர் வதனா னும், அவ்வொட்டக்கூத்தர் தம் பேச்சைக் கேட்டு அவர் கூறியாங்கே யரசன் நடப்பதனாலும், அங்கனமே நிலையாயிருக்க விரும்புதலின்றி யாச னனுமதி பெற்று, அச்சோணாட்டை- யே சேர்ந்த மள்ளுவமென்னுஞ் சிற்றாஈ நாட்டின் கண் முகரணூரிலிருந்து அரசு செலுத்திவந்த சந்திரன் சுவர்க்கி யென் னுக் குறுகிய மன்னனிடத்துச் சென்று, அவன் தன் வாயில் வித்து வானா யமர்ந்தார். இல்வா றவர் அமர்ந்திருக்கும் காலத்தே சமஸ்கிருத மொழியிலுள்ள நளசரித்திரத்தை வடமொழி வல்லுநர் பிரசங்கி/பக் கேட்டுக்கொண்டு வீற் றிருந்த சந்திரன் சுவர்க்கி நந்தம் புகழேந்திப் புலவரை நோக்கி, “ விேரிதளைச் செந்தமிழ்ப் பாவினிற் காப்பியமாக யாக்கல் வேண்டும்,' என்றான். வேந்த னாணையைச் சிரமேற்கொண்ட கவிஞர், புலவர்க்கு வெண்பாப்புலி' யெனச் சிறப்பித் தோதப்பெறும் வெண்பாபாப்பினிற் செவ்வனே புணைந்து பாத்து