பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்ப் புலவர் சரித்திரம் 1. சயங்கொண்டான் இப்புலவர் பெருமானது பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு முதலியனவற்று ளொன் றும் நன்கு புலப்படவில்லை. ஆயினும் யாமாராய்ந்தமட்டிற் றெளில் தன வற்றை யீண்டெடுத்துரைக்கின்றாம். இப்புலவர் பெருமான், உபயகுலோத் தமனெனவும், அபயனெனவும், சயதுங்கனெனவும் பல்வகைய சிறப்புப் பெயர்களும் பெற்ற விசயதர சோழ்ன து வாயில் வித்துவான்கடந் தலைவன். தெண்ணீர் பயற்றொண்டை நன்னாட்டு சான்றோருடைத்து,” என்ற மூதுரையை மனக்கொளாது தென்னாட்டுப் புலவருட் சில்லோர் போந்து புரிந்த வா தப் போரின்கண் தந்தம் 1/லவர்பிரான் வென்றமை காரணமாகச் சயங்கொண்டா னெனப் பட்டப் பெயர் பெற்றுத் திகழா நிற்புழி, விசயதரன் வடகசிங்கரைத் தொலைத்து வாகையந்தார் மிலைந்து போந்து, சயங்கொண்டானை நோக்கி, ( யானுஞ் சயங்கொண்டானாயினேன்;' என்றான். எனவே, ( சயங்கொண் டான் சயங்கொண்டான் மீது பரணி நூற்புனைவான்,' என்று நம் பாவலர் கோமான் கூறிச் சென்று சின்னாட்களுள், 'கலிங்கத்துப் பரணி' என்னும் நாலினை பசியற்றி யரசௗரவைக்களத்தே பன் னூற் புலவர்முன் பகர் தன் தாய் (கேற்றிய கருதி, அவ்வாறே செய்யாநின் றுழி, பரணிநூற் பாடல்களைப் பரிவு கூர்ந்து செவிமடுத்து வீற்றிருந்த வேந்தர் வேந்தன் ஒவ்வொரு தாழிசையி னிறுதியிலு மொவ்வொரு பொற்றேங்காய் பரிசிலாவுருட்டுபு தனக்கு அல் வித்துவான் மீதும் அவனது நாலின்மீதுமுள்ள அன்பினையு மார்வத் தினையும் வெளிப்படுத்தானென்று கூறுப. இக்கூற்றினை மெய்யெனக் கொண்டக்காற் சயங்கொண்டானென்பது கலிங்கத்துப் பரணியாக் கிபோன தியற்பெயரன்றெனல் சொல்லாமலே விளங்கும். சமயம் இனித் திருவுடைமன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென் னும்," என்ற திருவாய்மொழியை யொரு தூய்மொழியாக்கொண்டு விசயதரனை தேரே திருமாலெனவே கூறுகின்றனனேனும், இப்புலவர் பெருமானது சமயஞ் சைவமெனலே யமைவுடைத்தாம். அஃது கலிங்கத்துப் பரணியிற் கூறப்பட்டிருக்கும் முதற் செய்யுளாகிய கடவுள் வாழ்த்தினாற் றெளிவு பெறக்காண்க. அது வருமாறு: