பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

123




கீ

கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?

கீர்த்தியால் பசி தீருமா? 8400


கீர்த்தியும் அபகீர்த்தியும் வந்தால் போகா.

கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.

கீரி கடித்த பாம்பு போல.

கீரி கீரி நண்டு பிடி, வாய்க்கால் கீரி நண்டு பிடி, வயலுக்கு கீரி நண்டு பிடி.

(வாயை மூடித் திறக்கும் விளையாட்டு.)

கீரியும் பாம்பும் போல: 8405


கீரி வாய்ப் பாம்பு போல.

கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லா பட்டணமும் பாழ்.

கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுவதற்கா?

(கட்டுகிறதா?)

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.

(வைப்பது போல.)

கீரைக்குக் கழுவின தண்ணிர் கிண்டி அவிக்கப் போதும். 8410


கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் போல்.

கீரைக்குப் புழு வேரில்.

கீரை, கீரைத்தண்டு, கீரைப் புளிக் குழம்பு என்றானாம்.

கீரைத்தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டு ஏன்?

(பாட்டா?)

கீரை நல்லதானால் கழுவின தண்ணீரே போதாதா? 8415

(கழுவின தண்ணீரிலே வெந்துவிடும்.)


கீரை மசித்த வாணாயில் ரசம் வைத்த உறவு.

கீரையும் இரண்டு கறி பண்ணாதே.

கீரையும் மயிரும் விரவியது போல.