பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

129


குடம் தண்ணீரில் கொள்ளி வைத்தாற் போல.

குடல் அறுந்த கோழி எங்கே போகும்? 8535


குடல் அறுந்த நரி எவ்வளவு தூரம் ஒடும்?

(எந்த மட்டும்.)

குடல் ஏற்றத்துக்குக் கோடி வைத்தியம்.

குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

குடல் காய்ந்தால் நாய்க்கு நாற்றம் நறுமணம்.

குடல் காய உண்டால் உடல் காயம் ஆகும். 8540


குடல் கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.

குடலில் கண்ட தினவு போல்.

குடலும் கூந்தலும் கொண்டது மட்டும் கொள்க.

(கொள்கை.)

குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் அதுவும் கஜகர்ண வித்தை என்கிறான்.

குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் வாழைநார் என்பார். 8545

(உருவிக் காட்டினாலும்.)


குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்வேன்.

குடிலைப் பிடுங்குகிறது ஓக்காளம்.

குடி இருக்க வந்தாயோ? கொள்ளி வைக்க வந்தாயோ?

குடி இருந்த வீட்டிலே கொள்ளி வைக்கிறவன்.

(வீட்டுக்கே வைப்பதா?)

குடி இருந்து அறி; வழி நடந்து அறி. 8550


குடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார்.

குடி இருப்பது குச்சு வீடு; கனாக் காண்பது மச்சு மாளிகை.

(மச்சு வீடு.)

குடி இல்லா ஊரிலே அடியிடல் ஆகாது.

குடி இல்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன்.

(ஒற்றை விர்த்தகன். )

குடி இல்லா ஊரிலே குருவியும் பறக்காது. 8555


குடி இல்லா ஊருக்குக்குள்ள நரியே அரசன்.

குடி இல்லா விட்டால் குண்டுப் பெருச்சாளி உலவும்.

(குடியில்லா வீட்டில்.)

குடி உடையானே முடி உடையான்.