பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தமிழ்ப் பழமொழிகள்


குரங்கை அழைத்துக் கொண்டு கூத்துப் பார்க்கப் போனானாம்!

குரங்கைக் கண்ட நாயைப் போல.

குரங்கைத் தாங்காத கொம்பு உண்டா?

குரங்கைப் பறிகொடுத்த ஆண்டி போல.

குரங்கைப் பிடித்தாலும் பிடித்து விடலாம்; காக்கையைப் பிடிக்க முடியாது. 8890


குரப்பம் இட்டுத் தேய்த்தாலும் கழுதை குதிரை ஆகுமா?

குரல் இல்லாதவனுக்கு விரல்.

குரு இல்லாச் சிகூைடியும், கரு இல்லா வித்தும் பாழ்.

குரு இல்லாச் சீடன் உண்டா?

குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை; முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை. 8895

(ஊதியமும்.)


குரு இல்லா வித்தை பயன் இல்லை.

குரு இல்லா வித்தையும் முதல் இல்லா வாணிகமும்,

குரு என வந்தான்; திருஉரை தந்தான்.

(சிறு உரை.)

குருக்கள் குசு விட்டால் குற்றம் இல்லை.

(யாழ்ப்பாண வழக்கு.)

குருக்கள் நின்று பெய்தால் சிஷ்யன் ஓடிப் பெய்வான். 8900


குருக்கள் பிழைத்தது மறு பிறப்பு.

குருக்கள் பீயை அரைப்பென்று தேய்த்துக் கொள்கிறதா?

குருக்கள்மேல் ஆணை; இந்தக் கழியை விழுங்கு.

குருக்கள் வீட்டுச் சோமன் கொடி கண்டதே ஒழிய அரை கண்டதில்லை.

குருக்களைக் கடித்த நாய் சொர்க்கத்துக்குப் போகுமா, நரகத்துக்குப் போகுமா என்றது போல. 8905


குருக்களைக் கடித்த நாய் புழுத்துச் சாகும்.

குருக்களைக் கடித்த நாய் புழுத்துச் செத்தாலும் குருக்கள் வலிக்கு என்ன செய்வது?

குரு கடாட்சம் கூட்டுவிக்கும்.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை எதற்கு?

(மை இட்டு ஆவதென்ன?)

குருட்டுக் கண் தூங்கி என்ன? விழித்து என்ன? 8910