பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தமிழ்ப் பழமொழிகள்



குறட்டுக் கத்தி ஆண் பிள்ளையை விடாது; கொழுந்துக்கூடை பெண் பிள்ளையை விடாது.

குறத்தி பிள்ளை பெறக் குறவன் பத்தியம் தின்ன.

(மருந்து. காயம்.)

குறத்தி பிள்ளை பெறக் குறவன் பெருங்காயம் தின்பான்.

(காயம்.)

குறத்தி பிள்ளை பெறக் குறவன் மருத்துவம் பண்ண. 9135


குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு.

(வழக்கும்.)

குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீரா.

குறவன் குச்சுக் கட்டினாற் போல.

குறவன் விழிப்பது போல விழிக்கிறான்.

குறிக்குத் தகுந்த ராமசாம். 9140


குறிஞ்சி அழிந்து நெருஞ்சி ஆயிற்று.

குறிப்பு அறிந்து கொடுக்கும் கொடையே கொடை.

குறுக்குச் சால் ஒட்டுகிறான்.

குறுக்கே வந்து குட்டை குழப்பாதே.

(பேசி.)

குறுகு குறுகு குற்றாலம். 9145

(அகத்தியர் கூற்று.)


குறுகுறு நாதா குற்றால நாதா.

குறுங்கைக்கும் கயிலைக்கும் கூப்பிடு தூரம்.

(குறுங்கை-திருக்குறுங்குடி.)

குறுணிக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டுப் பதக்குப் பதக்கு என்று அடித்துக் கொண்டால் வருமா?

குறுணி கொடுத்து நாழி வாங்குகிறதா?

குறுணிப் பால் கறந்த போதிலும் கூரை பிடுங்கப் பார்த்திருக்கலாமா? 9150


குறுணி போட்டால் பதக்கு வருமா?

குறுணி மைதான் இட்டாலும் குருட்டுக் கண் தெரியுமா?

(குருடு குருடே.)

குறுணி மைதான் இட்டாலும் குறிவடிவம் கண் ஆகாது.

குறும்பாடு போல.

குறும்பைத் தவிர்க்கும் குடி தாங்கு. 9155