பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

163


கட்டினாலும்பட்டணத்துப் பெண் பறக்கை. 9325

(பட்டணத்துப் பெண் தட்டுவாணி.)


கூழைக் கும்பிடு.

கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக் கலப்பை காட்டைக் கெடுக்கும்.

கூறி விற்காதே; தேடி வாங்காதே.

கூறு கெட்ட மாட்டுக்கு ஆறு கட்டுப் புல்லா?

கூறையும் தாலியும்.

கூனனைக் கொண்டு குழப்படி மகளே, காணிக்குப் பேரப்பிள்ளை. 9330

(குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.)


கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.

கூனியூர் சென்றால் இங்கிருந்தே கூனிக் கொண்டா போக வேண்டும்?

கூனி வாயால் கெட்டது போல.