பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தமிழ்ப் பழமொழிகள்


கெட்டவனுக்குக் கெட்டதுதான் கிடைக்கும்; நல்லவனுக்கு நன்மையே கிடைக்கும்.

கெட்டவனைக் கண்டால் கிளையிலும் சேரார்.

கெட்டாயே கீரைத் தண்டே, தலையை விரித்துக் கொண்டோடக் கண்டேன்.

கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.

கெட்டார்க்கு நட்டார் இல்லை. 9380

(குறள்)


கெட்டார் வாழ்ந்தால் களப்பொறை தாமரை, வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் உதவார்.

(கிளம்புகிற தாமரை.)

கெட்டார் வாழ்ந்தால் கிளைப்புரை தலைமுறை.

கெட்டார்க்கு உற்றார்க்குக் கிளையிலும் இல்லை.

(வாழ்ந்தாருக்கு உறவு வழியிலும் உண்டு.)

கெட்டால் தெரியும் கோமுட்டிக்கு.

கெட்டால் பெரிய வெட்டரிவாள். 9385


கெட்டாலும் குலாசார முறையோடு கெட்டான்.

கெட்டாலும் கெடுகிறது, கிட்ட வந்து படுத்துக் கொள்.

கெட்டாலும் செட்டி; கிழிந்தாலும் பட்டு.

(கெட்டாலும் வேட்டியே. கெட்டாலும் செட்டியே.)

கெட்டாலும் பட்டணம் சேர்.

கெட்டான் பயல் பொட்டலிலே; விழுந்தான் பயல் சறுக்கலிலே. 9330


கெட்டான் வாழ்ந்தால் கிளை கிளையாய்த் தளிர்ப்பான்; வாழ்ந்தான் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான்.

கெட்டிக்கார முட்டாள்.

கெட்டிக்காரன் கொல்லையிலே கழுதை மேய்கிறது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தெரியும்.

(+ அசடன் புளுகு அப்போதே தெரியும்.)

கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும். 9395


கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை; மட்டித்தனத்துக்கு நயம் இல்லை.

கெட்டித் தங்கம் ஆனால் கலீர் என்று ஒலிக்குமா?

கெட்டு ஓடினாலும் நட்டு ஒடு. கெட்டு கிழக்கே போ.

(வடஆற்காடு வழக்கு )