பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தமிழ்ப் பழமொழிகள்


சன்டி முறைத்தால் காடு கொள்ளாது.

(புரண்டால்; மிரண்டால்; வெறிச்சால்.)

சண்டியிலும் சண்டி சகசண்டி. 10200

(சண்டிக்கும் முண்டி படுசண்டி.)


சண்டைக்குச் சிங்காரம் இல்லை.

சண்டை செய்யும் இரண்டு கடாக்களில் நடுவில் நரி நின்று நசுங்கினது போல.

சண்டை நடந்ததற்குச் சாட்சி என் மகன் இருக்கிறான்.

சண்டை பிடிக்கிறவனுக்குக் கூடச் சனிக்கிழமை ஆகாது.

சண்டை முகத்திலே உறவா? 10205

(உறவு ஏது?)


சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையை இறக்கு.

(சாத மூட்டையை)

சண்டை வருகிறது மாமியாரே, சாதத்தை எடுத்து உள்ளே வையும்.

(பானையை எடுத்து.)

சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவான்.

சணப்பன் கையில் அகப்பட்ட சீலைப் பேனைக் கொல்லவும் மாட்டான்; விடவும் மாட்டான்.

(சணப்பன்-சமணன்.)

சணப்பன் வீட்டுக் கோழி தானாக வந்து மாட்டிக்கொள்ளும். 10210

(தானே விலங்கு பூட்டிக் கொண்டது போல.)


சணப்பன் வீட்டு நாய் சணல் கட்டிலின் மேல் ஏறினாற் போல்.

சத்தத்துக்கு அளப்பதற்குமுன் பொதிக்கு அள.

சத்தம் பிறந்த இடத்தே சகல கலையும் பிறக்கும்.

சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற் போல.

சத்தாவரணம் சேவித்தால் செத்தவுடனே வைகுண்டம். 10215

(ஸ்ரீவில்லிபுத்தூரில்.)


சத்தியத்தில் சிறந்தவன் அரிச்சந்திரன்.

சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது.

சத்தியத்துக்கு அரிச்சந்திரன்: சாந்தத்துக்குத் தருமராஜன்.

சத்தியத்துக்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டு அழப்போகிறானா?

சத்திய நெறியே சன்மார்க்க நெறி. 10220


சத்தியம் இல்லாத வாய் போலே.

அதிதியம் சத்தி: தத்துவம் சுத்தி.

(சத்தியமே, சத்துவமே சித்தி.)

சத்தியம், தர்மம் நித்தியம்.

(சத்திய தர்மம்.)