பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

35



கடலில் கிடக்கும் துரும்புகளை அலைகளோடு தூக்கித் தரையில் தள்ளுகிறது போல.

கடலில் கையைக் கழுவி விடுகிறதா? 6465


கடலில் துரும்பு கிடந்தாலும் கிடக்கும்; மனசிலே ஒரு சொல் கிடவாது.

கடலில் பிறக்கும் உப்புக்கும் மலையில் விளையும் நாரத்தங்காய்க்கும் தொந்தம்.

(உறவுண்டு.)

கடலில் பெருங்காயம் கரைத்தது போல.

(உரசிய காயம் போல.)

கடலில் போட்டு விட்டுச் சாக்கடையில் தேடுகிறதா?

கடலில் மூழ்கிப் போனாலும் கடனில் மூழ்கிப் போகாதே 6470


கடலிலும் பாதி கடம்பாக்குளம்.

கடலின் ஆழத்தை அளந்தாலும் மனசின் ஆழத்தை அளக்க முடியாது.

கடலினுள் நா வற்றினது போல.

(திருவாசகம்.)

கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

(போட்டவர்கள்.)

கடலை அடைக்கக் கரை போடலாமா? 6475


கடலைக்காய்ப் பானையிலே கையை விட்டாற்போல.

கடலைத் தாண்ட ஆசை உண்டு; கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

(கடலைத் தாண்டக் கால் உண்டு.)

கடலைத் தாண்டினவனுக்கு வாய்க்கால் தாண்டுகிறது அரிதா?

கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது.

கடலைத் தூர்த்தும் காரியத்தை முடிக்க வேண்டும். 6480


கடலை விதைத்தால் கடுத்த உரம்.

கடலை விதைப்பது கரிசல் நிலத்தில்.

(கரிசல் காட்டில்.)