பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தமிழ்ப் பழமொழிகள்



கடை கெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம்.

கடை கெட்ட மூளி சூல் ஆனாலும் காற்பணத்துக் காசு செல்லும்.

கடை கெட்ட வாழ்வு, தலை கட்ட நேரம் இல்லை.

கடைச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டுக்கு அணையும்.

கடைசிச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும். 6615


கடைசிப் பிடி கட்டி மாம்பழம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்.

கடைத் தேங்காயை எடுத்து விநாயக பூஜை செய்த கதை.

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுப்பாள்.

(எடுக்கிறது.)

கடைந்து எடுத்த பேர் வழி. 6620


கடைப் பிறப்பு கழுதைப் பிறப்பு.

கடையச்சே வாராத வெண்ணெய் குடையச்சே வரப் போகிறதா?

கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அண்டை வீட்டுக்காரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?

கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அவிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?

கடையில் இருக்கும் கன்னியைக் கொள். 6625


கடையில் வந்ததும் அரிசியோ? நடையில் வெந்ததும் சாதமோ?

கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.

கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.

கடையிலே தேளைக் கண்டு கை அசக்கினால் நிற்குமா?

கடையும் போது வராத வெண்ணெய் குடையும் போது திரண்டு விடுமா? 6630


கடைவாயில் ஆனை ஒதுக்கினாற் போல.

கடைவாயில் ஓட்டின பீயைப் போல.

கண் அளக்காததைக் கை அளந்து விடுமா?

கண் அறிந்தும் அயல் மனையில் இருக்கிறதா?

கண் இமை, கை நொடி அளவே மாத்திரை. 6635


கண் இமை போலக் காக்கிறான் கடவுள்.

கண் இமை போலே கரிசனமாய்க் காக்கிறது.