பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தமிழ்ப் பழமொழிகள்



கண்ட இடம் கைலாசம்.

கண்ட கண்ட கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன்.

காணாத கோயிலுக்குச் காணிக்கை நேர்ந்து வைத்தேன். 6665


கண்ட தண்ணீருக்கு நிறை வேளாண்மை, கண்டது எல்லாம் ஓடித் தின்னும் ஆடு; நின்று நின்று மேய்ந்து போகும் மாடு,

கண்டதில் பாதி சவுசிகம்; சீமையில் பாதி ஶ்ரீவத்ஸம்; பாதியில் பாதி பாரத்துவாஜம்.

(இவை அந்தணர்களினுடைய கோத்திரங்கள்.)

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்.

(கேட்கப் பண்டிதன் ஆவான்.) கண்டது காட்சி; பெற்றது பேறு.

6670


கண்டது கை அளவு காணாதது உலகளவு.

(கைம் மண் அளவு )

கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

(மூள்வது புகை.)

கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை.

கண்டது பாம்பு. கடித்தது சோளத்தட்டை

கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை. 6675


கண்டதும் மருதாணியைக் காலில் இட்டுக் கொண்டால் கொண்டவனுக்கு முன்னால் குதித்தோடிப் போகலாம்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.

(கொண்டதே கொள்கை, உண்டதே மிச்சம்.)

கண்டதைக் காலை வாரி அடிக்கிறதா?

(கண்டதைக் கொண்டு.)

கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே: காட்டு மரத்திலே நில்லாதே.

கண்டதைக் கேளா விட்டால் கொண்டவன் அடிப்பான். 6680


கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்,

கண்ட பாவனையா கொண்டை முடிக்கிறது?

கண்டம் இல்லாத எருமை தண்டம்.

கண்டம் ஒருத்தன் கழுத்து ஒருத்தன், துண்டம் ஒருத்தன்; துடை ஒருத்தன்.