பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

49


கண்ணும் மூக்கும் வைத்தான்; காரமும் கொஞ்சம் சேர்த்தான்.

கண்ணே. கண்ணே என்றால் உச்சி குளிருமா? 6765


கண்ணே, காதே, நமஸ்காரம்; கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே.

கண்ணை அலம்பி விட்டுப் பார்க்க வேண்டும்.

(கண்ணைக் கழுவி.)

கண்ணை இமை காப்பது போல.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல.

கண்ணைக் கண்ணைக் காட்டுது, அண்ணி கழுத்துக் கருகுமணி. 6770


கண்ணைக் காட்டினால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா?

(காட்டி அழைத்தால்.)

கண்ணைக் குத்திய விரலைக் களைந்து எறிவார் உண்டோ?

கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.

(சுந்தரர் வரலாறு.)

கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.

(கழுத்தைக் கொடுத்தது.)

கண்ணைக் கொசு மொய்க்கக் கடை வாயை ஈ மொய்க்கப் புண்ணைப் புழு அரிக்கப் பெண்ணைப் போக விட்டாள் புங்காத்தை. 6775


கண்ணைக் கொண்டு நடந்தது போல உன்னைக் கண்டு நடந்தேன்.

கண்ணைத் தின்ற குருடனும் நியாயத்தை ஒத்துக் கொள்ள வேணும்.

கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தாலும் கண்கட்டு வித்தை என்பார்கள்.

கண்ணைப் பிதுக்கிக் காட்டியும் வித்தையா?

கண்ணை மூடிக் குட்டுகிறதா? 6780


கண்ணை மூடிக் கொண்டு காட்டில் நடப்பது போல.

கண்ணை விறைச்சுக் கொண்டு எங்கே போனாய்? கவுண்டன் செத்தான்; இழவுக்குப் போனேன்.