பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப்பழமொழிகள்

65

 கல்யாணத்தை நிறுத்தச் சீப்பை ஒளித்து வைத்தது போல.

கல்யாணப் பஞ்சமும் களப்பஞ்சமும் இல்லை.

(கல்யாணப் பஞ்சம் உண்டு.)

கல்யாணப் பந்தலிலே கட்டின ஆடு போல.

கல்யாணப் பந்தலிலே தாலி கட்ட மறந்தது போல்.

கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை: கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலை. 7120


கல்யாணம் எங்கே? காசுப் பையிலே.

கல்யாணம் என்றால் கிள்ளுக் கீரையா?

கல்யாணம் கழிந்தால் கைச்சிமிழ் கிட்டாது.

கல்யாணம், கார்த்திகை, சீர், செனத்தி.

கல்யாணம் செய்கிறதும் கதவைச் சாத்துகிறதும். 7125


கல்யாணம் செய்தும் சந்நியாசியா?

கல்யாணம் பண்ணவில்லையென்று களிப்பு: ஊர்வலம் வரவில்லையென்று உளப்பு.

(ஒளப்பு.)

கல்யாணம் பண்ணாமல் பைத்தியம் தீராது: பைத்தியம் தீராமல் கல்யாணம் ஆகாது.

கல்யாணம் பண்ணிக்கொள் என்றால், நீயே பெண்டாட்டியாய் இரு என்றது போல.

கல்யாணம் பண்ணியும் சந்நியாசி, கடன் வாங்கியும் பட்டினி. 7180


கல்யாணம் பண்ணின வீட்டில் ஆறு மாசம் கருப்பு:

(கருப்பு:பஞ்சம்.)

கல்யாணம் பண்ணும் வரையில் பிள்ளை; கண்ணை மூடும் வரையில் பெண்.

கல்யாணம் போவதும் கட்டி அழுவதும் வட்டியில்லாக் கடன்.

கல்யாணம் முடிந்த பிறகு பந்தலில் வேலை என்ன?

கல்யாணமும் வேண்டாம்; கல்லெடுப்பும் வேண்டாம். 7135