பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

69


கல் வீட்டில் இருக்கும் கடனும் தெரியாதாம்; கறுப்புப் புடைவையில் இருக்கும் அழுக்கும் தெரியாதாம். 7205


கல்வீட்டுக்காரி போனால் கமுக்கம்; கூரை வீட்டுக்காரி போனால் கூச்சம்.

கல உமி நின்றால் ஓர் அரிசி தட்டாதா?

(ஓர் அவிழ்.)

கல உமி தின்றால் ஓர் அவல் கிடைக்காதா?

கலக்கத்தில் கலக்கம் கடன் கொண்டார் நெஞ்சக் கலக்கம்.

கலக்கந்தை கட்டிக் காணப் போனால் இருகலக் கந்தை கட்டி எதிரே வந்தாள். 7210


கலக்கம் இல்லா நெஞ்சுக்கு இனக்காப்பு என்ன?

கலக்கம்பு தின்றாலும் காடை காட்டிலே.

கலக்கம்பு போட்டு வளர்த்தாலும் காடை காட்டிலே.

கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்; அடர விதைத்தால் போர் உயரும்.

கலக்கிய தண்ணீரில் கெளிற்று மீன் வாய் திறந்து தவிப்பது போல. 7215


கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது.

கலத்தில் இட்டாயோ, வயிற்றில் இட்டாயோ?

கலத்தில் சாதம் போட்டதும் காசிக்குப் போனவனும் வருவான்.

கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்.

(புகாதவன்)

கலகத்திலே புளுகாதவர் இல்லை. 7220


கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?

(போன பிற்பாடு.)

கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கலகமே மெய்யானால் புளுகாதவன் பாவம்.

கலத்தில் இட்டுக் கையைப் பிடிக்காதே. 7225

(பிடிக்கிறதா.)