பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தமிழ்ப் பழமொழிகள்


ஒட்டனுக்குத் தெரியுமா லட்டுருண்டை?

ஒட்டாது பாவம்; கிட்டாது சேவை.

ஒட்டி உலர்ந்து ஊமத்தங்காயாய்ப் போய்விட்டான். 5860

(உலர்ந்த.)


ஒட்டிய உடம்பும் ஒடுக்கிட்ட வாழ்நாளும்.

ஒட்டிய சீதேவி நெட்டியோடே போம்.

(சீதாதேவி.)

ஒட்டின பேரைத் தொட்டிலும் கொள்ளும்; ஒட்டாத பேரைக் கட்டிலும் கொள்ளாது.

(ஒட்டினால் கொள்ளும். ஒட்டினாரை.)

ஒட்டினாலும் உழக்குப் பீச்சுகிறதா?

(உழக்குப் பீர் செல்கிறதா?)

ஒட்டுக் கதை கேட்பவர் செவிட்டுப் பாம்பாய்ப் பிறப்பார். 5865

(யாழ்ப்பாண வழக்கு.)


ஒட்டுத் திண்ணை நித்திரைக்குக் கேடு.

ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாய் போட்டவன்.

ஒட்டு மூத்திரத்துக்கு ரக்ஷாபந்தனம் செய்தாளாம்; பட்டறைப் பீயைப் பாயோடு பிடித்தாளாம்.

ஒட்டைக்குக் கரும்பு மெத்தக் கசப்பு.

ஒட்டைக்குச் சுளுவு பட்டாற் போல. 5870

(அளவு மீட்டர் போல்.)


ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறது போல.

ஒடக்கான் முட்டு வைக்காத காடு,

ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்று கோல் ஆகும்.

(வேண்டும்.)

ஒடுக்கம் சிதம்பரம்.

ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் அடங்குமா? 5875


ஒண்ட வந்த எலி உரம் பெற்றது; அண்டியிருந்த பூனை ஆலாய்ப் பறக்கிறது.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தியதாம்.

(ஊர்ப் பிடாரி ஆனதாம்.)