பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழ்ப் பழமொழிகள்


கனிந்த பழம் தானே விழும்.

கனிந்த பழம் நீர் தின்றீர்; காயை உலுக்கி விட்டீர். 7670


கனிந்த பொங்கலில் கரும்புச் சாறும் கலந்ததாம்.

கனிந்த மரத்தில் கல்லடி கில்லடி.

கனியாத கனியை அடித்துப் பழமாக.

கனியிலே முள் ஏறினது போல.

கனியை விட்டுக் காயைத் தின்கிறதா? 7675


கஜ கரணம்.

கஜ கரணம் கோ கரணம் போட்டுப் பார்க்கிறான்.

கஜ கர்ப்பம்.

கஜப் புளுகு.

கஷ்டம் தெரியாமல் நெல்லுக் குத்தலாமா? 7680


கஷ்டத்திற்கு நஷ்டம் அதிகம்.

கஷ்டத்தின் அந்தியத்தில் சுகம்.

கஷ்டப் படலாம்; துக்கப்படல் ஆகாது.

கஷ்டப் படாவிட்டால் லாபம் இல்லை.