பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

215


பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி; வேலும் வாளும் அடலுக்ரு உறுதி.

பாலும் பதக்கு, மோரும் பதக்கோ?

பாலும் வெள்ளை; மோரும் வெள்ளை. 16175


பாலை ஊட்டுவார்கள்; பாக்கியத்தை ஊட்டுவார்களா?

(ஊட்டலாம்.)

பாலை ஒரு கண்ணிலும் சீழை ஒரு கண்ணிலும் பார்ப்பது.

பாலைக் கமரிலே உகுத்தாற்போல.

பாலைக் குடிக்க வந்த பூனை மோரைக் குடிக்குமா?

பாலைக் குடிக்கிற பூனைக்கு அடிக்க வருகிறது தெரியுமா? 16180


பாலைக் குடிக்கிற பூனை பானையையும் கொண்டு போமா?

பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும்; கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் வரும்.

பாலைச் சுருக்கி மோரைப் பெருக்கிக்குடி.

பாலைத்தான் புகட்டலாம்; பாக்கியத்தைப் புகட்ட முடியுமா?

(ஆரோக்கியத்தையும்.)

பாலைப் பார்க்காவிட்டாலும் பால் பானையைப் பார்க்க வேண்டும். 16185


பாலைப் பார்க்கிறதா? பானையைப் பார்க்கிறதா?

(பார்த்தோ, பாத்திரத்தைப் பார்த்தோ.)

பாலைப் பார்த்துப் பசுவைக் கொள்; தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்.

பாலை வார்த்துத் தலையை முழுகி விடு.

பாலை விரும்பாத பூனையும் உண்டோ? 16190


பாலொடு கலந்த நீரும் பால் ஆகிவிடும்.

பாாலாடு ஆயினும் காலம் அறிந்து உண்.

பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.

பாவத்துக்கு இடம் கொடாதவன் பாவத்தை ஜயம் கொள்வான்.

(பாவத்தைச் செய்யச் செய்வான்.)

பாவத்துத்குப் பிள்ளை பெற்றால் பரியாரி என்ன செய்கிறது. 16195

(பரியாரி வைத்தியன்.)


பாவம் இருக்கும் பந்தல் காலிலே.

பாவம் உள்ள இடத்திலே பழி போம்.