பக்கம்:தமிழ் அமுதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொற்பொழிவாளர்

நாட்டார் அவர்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கங்களிலும் தமிழ் மாநாடுகளிலும் சைவ சமயத் தொடர்பான கழகங்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகப்பல. அவை இவர்தம் ஆழ்ந்து அகன்ற தமிழ் அறிவையும், சமயநூற் புலமையையும் நன்கு விளக்கவல்லன ; கரந்தைத் தமிழ்ப் பொழிலிலும், செந்தமிழ்ச் செவ்வியிலும் வெளிவந்துள்ளன. திரிசிரபுரம் சைவ சிந்தாந்த சபையில் இவர் ஆற்றிய சமயச் சொற்பொழிவுகள் எண்ணிறந்தன. அப்பெரும் நகரத்தில் இன்று சிலரேனும் சைவ உணர்ச்சியுடன் இருப்பதற்கு நாட்டார் அவர்கள் சமயத் தொண்டே சிறந்த அடிப்படை என்னல் தவறாகாது.

குடும்பம்

நாட்டார் திருமகளார் பார்வதி அம்மையார் வித்துவான் பட்டம் பெற்றவர். நாட்டார் மருகர் இருவரும் தமிழ் ஆசிரியர்கள். பேரன்மார் தமிழ் ஆனர்ஸ் படித்தவர்கள். தம்பி கோவிந்தராய நாட்டார் சிறந்த தமிழ் அறிஞர். இங்ஙனம் இப் புலவர் பெருமானாரது குடும்பத்தார் அனைவரும் தமிழன்னையின் தவப்புதல்வராக இருத்தல் பாராட்டத்தக்கதன்றாே ?

நற்பண்புகள்

இப் பெரியார் சீரிய ஒழுக்கம் உடையவர்; ஒழுக்கத்தின் அவதாரம் எனக் கூறலாம்; உழைப்பால் உயர்ந்த பெரியவர் , தம்மீது பொறாமைப்பட்டோரையும் அன்பினால் அணைத்த உத்தமர். இப்பெரியாருடன் ஏறத்தாழப் பத்து ஆண்டுக்காலம் யான் நெருங்கிப் பழகியவன். புறங்கூறுதல் இவர்பால் யான் கண்டதில்லை. இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/18&oldid=1459122" இலிருந்து மீள்விக்கப்பட்டது