பக்கம்:தமிழ் இனம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனைவி 107

வழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் வருகின்ற சில செய்திகளே சான்றாகும். பாஞ்சாலி பாண்டவரை மணப்பதற்கு முன்னரே ஐடிலகவுதமி என்ற பார்ப்பன மங்கை இருடிகள் எழுவரை மணந்து வாழ்ந்தாள் ; மரிசா என்பவள் பிரசேதர் பதின்மரை மணந்து வாழ்ந்தாள் ; யயாதியின் குடும்பத்தில் பிறந்த மாதவி என்பவள் அரசர் நால்வரை மணந்து வாழ்ந்து வந்தாள். மகாபாரதக் குறிப்புப்படி, இப்பழக்கம் ஒரு காலத்தில் பெருவழக்காக இருத்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

வழக்கிலும் உள்ளது

(1) நீலகிரியில் வாழும் தொதவர்களிடம் இப்பழக்கம் இருக்கிறது. ஒரு குடும்பத்திலுள்ள ஒருவனுக்கு மணமுடிக்கப்பட்ட மனைவி, அவன் உடன் பிறந்தார் அனைவர்க்கும் மனைவியாக இருந்து வருவது இன்று வரையிலும் காணத்தக்கது. சில சந்தர்ப்பங்களில் ஒருத்தி தன் இனத்தைச் சேர்ந்த பல்வேறு குடும்பத்தினரை மணத்தலும் உண்டு. மனைவி கருவுறின், அவளுக்கு ஏழாம் மாதம் நடை பெறும் சடங்கிற்குப் பொருளுதவி செய்யும் கணவனே, பிறக்க இருக்கும் குழந்தைக்குத் தகப்பன் என்று கருதப்படுவான். அச்சடங்கில் வில்லும் அம்பும் மனைவியின் கையில் அவன் கொடுத்தல் உண்டு, அங்ஙனம் கொடுப்பவனே குழந்தையின் தந்தை. உடன் பிறந்தார் அனைவர்க்கும் மனைவியாகும் ஒருத்திக்கு, அக்கணவருள் மூத்தவனே I’ Prof. N. K. Dutt, ‘Crišin and orowth of Caste in

India’, vol. 1, pp 73, 74 & 113, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/104&oldid=1359752" இலிருந்து மீள்விக்கப்பட்டது