பக்கம்:தமிழ் இனம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐவருக்கு மனைவி

113

காலத்தில் ஒருத்தி பலரை மணந்து வாழும் முறையும் வழக்கில் இருந்துவருகிறது. இந்நிலையில், ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முன்-மக்கள் தொகையும் நாகரிக வளர்ச்சியும் மிகுதியும் ஏற்பட்டிராத காலத்தில், ஒருத்தி ஐவரோடு வாழ்ந்தமை வியப்பில்லை. ஆனால் ஒவ்வொரு சமூகத்தின் திருமணப் பழக்க வழக்கங்களை அறியும் வசதியற்ற இடைக்காலத்தில், பாரத வரலாற்றைப் படித்தவர். ஒருத்தி ஐவரை மணத்தல் விபரீதம் என்று கருதி, பாஞ்சாலி வரலாற்றில் வியாசனையும் சிவபெருமானையும் இந்திரர் ஐவரையும் புகுத்திக் கதை கட்டியிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சி முறையில் கொள்வதால் இழுக்கொன்றுமில்லை. இங்ஙனம் பல நூற்றாண்டுகளாக இராமாயண பாரத நூல்களில் கணக்கற்ற இடைச்செருகல்கள் நேர்ந்துள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் நன்கு விளக்கியுள்ளனர். இடைக்கால மக்கள் தம் கொள்கைகளை நிலைநிறுத்தற்கும், தம்மால் விளக்கம் கூற முடியாதவற்றுக்கும் ஒரு முடிவு காண்பதற்கும் தெய்வீக பாத்திரங்களை (Supernatural elements)க் கற்பித்து மகிழ்ந்தனர். ‘தெய்வத்தால் இது நேர்ந்தது’ என்று கூறிவிட்டால், கதை கேட்கும் பொது மக்கள் சிந்தனைக்கு இடம் தராமல் அமைந்துவிடுதல் பெரும்பாலும் வழக்கமன்றாே?

ஆராய்ச்சியாளர் கூற்று

ஆசிய-ஆஸ்ட்ரேலிய மொழிகளை ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ப்ரிஸ்லஸ்கி என்பவர், “இந்து மதக் கதைகள் பலவற்றுள்ளும் மச்சகந்தி கதை போன்ற மாபாரதக் கதைகளை ஆசிய-ஆஸ்ட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/110&oldid=1357795" இலிருந்து மீள்விக்கப்பட்டது