பக்கம்:தமிழ் இனம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐவருக்கு மனைவி

117

மாற்றப்பட்டுவிட்டன.[1] ஒவ்வொரு கொள்கையினர் நாடாண்டபொழுது அவரவர் கோயில்கள் எண்ணிக்கையில் மிகுதல் இயல்பு. வைணவர் ஆட்சிக்காலத்தில் சிவன் கோவில்களும், பெளத்த சமணர் கோவில்களும் திருமால் கோவில்களாக மாறினமைக்கும், அவ்வாறே சைவராட்சியில் பிற சமயத்தார் கோயில்கள் சில சிவன் கோயில்களாக மாறினமைக்கும் வரலாற்றில் சான்றுண்டு.

சமயவெறி தலைதூக்கிய சமுதாயத்தில் இத்தகைய மாற் றங்கள் தோன்றுதல் இயல்பே யாகும்.———————

  1. 'தருமன்' அல்லது 'தருமராஜன்' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று. பிங்கல நிகண்டில் 'தருமன்' என்றும், திவாகரத்திலும், நாமலிங்கானு சாசனத்திலும் 'தர்மராஜன்‘ என்றும் புத்தருக்கு வேறுபெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியக்கூடும். இந்தத் தருமராஜர் கோயில்களான பெளத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப்பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவருள் ஒருவரான தருமராஜர் கோயில்களாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜர் கோயில்களில், பெளத்தர் போற்றும் 'போதி' என்னும் அரசமரங்கள் இன்றும் காணப்படுவதே, தருமராஜர் கோயில்கள் பண்டைக் காலத்தில் பெளத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பெளத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பெளத்த கோயில்கள் உண்டென்றும், அக்கோயில்களிலுள்ள புத்த விக்ர கங்களுக்குத் 'தருமராஜர்' அல்லது 'தருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகிறதென்றும் அறிகிறோம். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இப்போதைய தரும ராஜர் கோயில்கள் பண்டைக் காலத்தில் பெளத்தக் கோயில்களாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படும். ‘ - "பெளத்தமும் தமிழும்", பக். 150-151,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/114&oldid=1361897" இலிருந்து மீள்விக்கப்பட்டது