பக்கம்:தமிழ் இனம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழ் இனம்

அறிந்தவன் போல, நன்மக்களைக் கண்டால் தோன்றும் மன அடக்கம் உடையவன்; வறியோர் வறுமையைக் கொடையிற் போக்கும் வலியன்; இத்தகைய பெருங்குண முடையான் என்னைக் குறை பிரத்தலைக் காண்.” (செ. 11)

இங்ஙனமே செ. 14 முதலியவற்றில் தலைவன் சிறப்பியல்புகள் தோழியாலும் தலைவியாலும் பல படப் பாராட்டப்பட்டுள. இவை இக்குறமகளிரதம் ஒழுக்க நிலையையும் அறிவு மேம்பாட்டையும் தலைவன் உயர்வையும் அளந்து அறிவிப்பன ஆகும்.

6. தலைவி தோழிக்கு அறத்தொடு நின்று இறுதியில், “நான், நம் குடிக்கு வடுவாகாமல் கற்புக் கடம்பூண்ட செய்தியை உரியவர்பால் உரை. நீ உரைப்பின், நிலையற்ற உலகில் நிலை நிற்பதோர் புகழ் நமக்குப் பொருந்தும்,” என்று கூறலை எண்ணிப் பார்மின்! (செ. 18). காதல்கொண்ட கணவனை மணத்தலே நிலையற்ற உலகில் நிலை நிற்பதோர் புகழாம்! ஆ! என்னே குறமகள் நுண்ணறிவும் ஒழுக்கமும்!

7. பொருந்தாக் காமமாகிய பெருந்திணையுள்ளும் தலைவி, “மகளிரை வலிதிற் புணர்தலும் ஒரு மணம் எனத் தலைவன் கூறல் மெய்யாயின்-உலக ஒழுக்கமும் அத்தன்மைத்தாயின்-யான் மறுப்பதால் இவன் நலியுமாயின்-இவன் மனத்தில் ‘முற் பிறப்பில் யானும் இவளும் வேறல்லம்’ என்பதொன்று தோன்றுமாயின்-நாம் மறுப்பதில் என்ன பயன்?” எனக்கூறி உடம்படுகிறாள். இப்பெருந்திணை தலைவியின் பேரறிவு காணத்தக்கது அன்றோ? (செ. 26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/99&oldid=1356882" இலிருந்து மீள்விக்கப்பட்டது