பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடி

102

கடுவாய்


கடி = வாசனை, கூர்மை, காவல், பூசை, அதிசயம், அச்சம், இருப்பு, காலம், ஐயம், திருமணம், ஒசை, விரைவு, நீக்கம், பிசாசு, கரிப்பு, புதுமை, மிகுதி, கடிஞை ஒளி, குறுந்தடி, சிறப்பு, விளக்கம்
கடிகை = தாழ், துண்டு, நாழிகை, முகூர்த்தம் விதிப்பவன், மங்கல பாடகர், தோள் வளை, கழுத்துப்பட்டை, குத்துக்கோல்
கடிசூத்திரம் = அரைஞாண்
கடிஞை = யாசிப்பவர் மட்கலம்
கடிதடம் = பெண்குறி
கடிதம் = பிசின், அடுக்கல், கடிதம்
கடிதல் = கோபித்தல், தண்டித்தல், ஓட்டுதல், அடக்குதல், விரைதல், அழித்தல், கொல்லுதல், நீக்கல்
கடிந்தோர் = முனிவர்
கடிப்பகை = கடுகு, வேம்பு
கடிப்பம் = ஆபரணப்பெட்டி, காதணி
கடிமரம் = காவல் மரம், பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல்மரம்
கடிப்பு = குறுந்தடி, ஆமை, காதணி
கடிவை = யானை
கடிறு = யானை
கடு = விஷம், பாம்பு, முள், கடுக்காய், வெறுப்பு
கடுக்குதல் = பூசுதல், ஒத்தல், சுளித்தல், உளைதல்
கடுக்கை = கொன்றை
கடுங்கண் = கொடுமை, அஞ்சாமை
கடுத்தலை = வாள்
கடுத்தல் = உவமையாதல், நோவெடுத்தல், கோபித்தல், உறைத்தல், ஒத்தல், சந்தேகம் கொள்ளல், குறித்தல், விரைதல், மிகுதல்
கடுப்பு = கொதிப்பு, ஒப்பு, கோபம், விரைவு, அகங்காரம்
கடுமா = புலி, சிங்கம், யானை
கடும்பு = சுற்றம், சும்மாடு
கடுவல் = கடுங்காற்று, வன்னிலம்
கடுவளி = பெருங்காற்று
கடுவன் = குரங்கு, நாய், பூனை இவற்றின் ஆண், படைநோய்
கடுவாய் = புலி, ஒரு நதி