பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107


கதிர்ப்பு = ஒளி
கது = மலைப் பிளவு
கதும்பு = கன்னம், பெண் மயிர், மயிர்
கதுவுதல் = பற்றுதல், அழிதல்
கதை = தடி, பொய்வார்த்தை, சொல்
கதைத்தல் = சொல்லுதல
கத்தணம் = சட்டை
கத்தபம் = கழுதை
கத்திகை = மாலைவகை
கத்தியம் = வசனம், நல்லாடை
கத்தியோதம் = மின்மினிப்பூச்சி
கத்திரியர் = அரசர், க்ஷத்திரியர்
கத்தை = கழுதை, கற்றை
கத்யோதம் = மின்மினிப்பூச்சி
கநகாசலம் = பொன்மலை, மேருமலை
கநிட்டன் = தம்பி
கநிட்டிகை = சிறுவிரல்
கநித்திரம் = மண்வெட்டி
கந்தகம் = முருங்கை மரம், வெள்ளைப் பூண்டு
கந்தசாரம் = சந்தனம், பனி நீர்
கந்தமூலம் = கிழங்கு
கந்தம் = வாசனை, சந்தனம், தூண், கிழங்கு, கழுத்தடி, இந்திரியம், கருணைக்கிழங்கு, அணுக்கூட்டம்
கந்தரம் = கழுத்து, கடற்பாசி, மேகம், மலைக்குகை
கந்தருவம் = குதிரை, இசை, இசைப்பாட்டு, ஒருவகைமணம்
கந்தர்ப்பன் = மன்மதன்
கந்தவகன் = காற்று
கந்தவாகனன் = காற்று
கந்தழி = பரம்பொருள்
கந்தவம் = சட்டை
கந்தாயம் = விளைவுகாலம், பங்கு, லாபம்
கந்தாரம் = தேன், இசைப்பாட்டு
கந்தாவகன் = காற்று
கந்தி = பாக்கு, வாசனைப் பொருள், துவரை, மரகதம், ஆரியாங்கனை
கந்து = பசு முதலியன தினவு போகத் தேய்த்துக் கொள்ள அமைத்த தறி, தூண், கட்டுத்தறி, பற்றுக்கோடு, பதர், குதிரையின் முழுப்பாய்ச்சல்
கந்துகம் = குதிரை, பந்து
கந்து கவரி = பந்துப்பாட்டு
கந்துள் = கரி
கந்தை = கருணைக்கிழங்கு