பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதைப்பு

9

அநலி


அதைப்பு = வீக்கம், பெருமை
அதோகதி = நரகம், பாதலம்
அதோமாயை = அசுத்த மாயை
அதோமுகம் = ஆற்று நீர்க் கழிமுகம், கீழ் நோக்கிய முகம்
அத்தகிரி = மேற்கு மலை
அத்தம் = கை, ஹஸ்த நட்சத்திரம், அர்த்தம், கண்ணாடி, அருநெறி, பொருள், காடு, பாலைநிலம், சிவப்பு
அத்தன் = பிதா, கடவுள், உயர்ந்தோன், குரு, செல்வன்
அத்தாணி = அரசிருக்கை
அத்தி = எலும்பு, கொலை, யானை, கடல்
அத்தி நாத்தி = உண்டு, இல்லை
அத்திபஞ்சரம் = எலும்புக்கூடு
அத்தியட்சன் = மேலதிகாரி
அத்தியந்தம் = மிகுதி
அத்தியயனம் = வேதம் ஒதல், படித்தல்
அத்தியாத்துமிகம் = தன்னால் வரும் துன்பம்
அத்தியாயம் = இலக்கியச் செய்யுள் பகுதி
அத்திரசத்திரம் = அம்பும் வாளும்
அத்திரம் = அம்பு, வில், கழுதை, குதிரை, மலை, இலந்தை
அத்திரி = உலைத்துருத்தி, ஒட்டகம், கோவேறு கழுதை, குதிரை, மலை, அம்பு, விண், ஒரு முனிவர்
அத்தினி = பெண்யானை
அத்து = சிவப்பு, அரைப்பட்டிகை, எல்லை
அத்துணை = அவ்வளவு
அத்துவா = கதி அடைவிக்கும் வழி
அத்துவிதம் = இருவிதமாகாமை
அத்துவைதம் = இறைவனும் உயிரும் ஒன்றென்னும் மதம்
அநகம் = பாவமில்லாமை
அநங்கம் = ஆகாயம், மல்லிகை
அநங்கன் = மன்மதன்
அநந்தசயனம் = பாம்புப் படுக்கை
அதந்தசாயி = விஷ்ணு
அநந்தம் = பொன்
அநந்தன் = கடவுள், ஆதிசேடன்
அநலம் = அக்கினி
அநலி = சூரியன், நெருப்பு

2