பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கன்னமதம்

120

காடவன்



கன்னமதம் = காதால் வடியும் மதம்
கன்னம் = களவு, காது, பெருமை
கன்னல் = கரும்பு, கரகம், நாழிகை, சர்க்கரை, குருவி
கன்னாடர் = சேரர்
கன்னி = குமரி, உமை, பெண், அழிவின்மை, இளமை, புதுமை
கன்னிகாரம் = கோங்குமரம்
கன்னிகை = பெண், தாமரைக் கொட்டை, யானைக் கை நுனி
கன்னிநாடு = பாண்டிய நாடு
கன்னிபுரம் = மதுரை
கன்னிப்போர் = முதற்போர்
கன்னுவர் = கன்னார்
கா = சோலை, பூந்தோட்டம், நிறை, காத்தல், காவடி, கலைமகள் தோட் சுமை, துலாம், காவடித்தண்டு, பூப்பெட்டி
காகதாலியம் = காக்கை ஏறப் பனம் பழம் விழுதல் என்னும் ஒருவகை நியாயம்
காகதுண்டம் = அகில்
காகநதி=காவேரி
காகந்தி = காவிரிப்பூம்பட்டினம்
காகம் = அரிட்டநாள், குறி
காகளம்= எக்காளம்
காகாரி = ஆந்தை
காகுத்தன் = இராமன்
காகுளி = பேய், மெத்தை, இசை
காகோதரம் = பாம்பு
காகோளி = அசோகமரம்
காங்கு = பெரும் பானை
காங்கேயம் = ஒரு வகைப் பொன்
காசம் = நாணல், பளிங்குமணி, இருமல், பொன்
காசறை = மயிற்சாந்து, கத்தூரி மான்
காசா = சொந்தம், நாணல், அசல்விலை, எருமை
காசினி = பூமி
காசு = குற்றம், நாணயம், பொன், இரத்தினம், ஒட்டியாணம்
காசை = நாணல், காயாமரம்
காஞ்சனம் = பொன், சண்பகம், புன்கு
காஞ்சனி = மஞ்சள்
காஞ்சி = ஏழுகோவையணி, ஆற்றுப்பூவரசு, ஒருமரம், காஞ்சிபுரம், நிலையாமை
காஞ்சுகம் = சட்டை
காஞ்சுகி= சட்டை, சட்டையிட்ட மெய்காப்பாளன்
காடவன் = பல்லவர்களின் பட்டப் பெயர்