பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறைவில்

142

கூதிர்காலம்



குறைவில் = வானவில்
குற்குலு = குங்கிலியம்
குற்சிதம் = அருவருப்பு
குற்றவீடு = குற்றம் நீக்கம்
குற்றி = தறி, மரக்கட்டை
குற்றுதல் = பறித்தல்
குனித்தல் = ஆடல், வளைத்தல்
குனிப்பு = ஆடல், வளைக்கை
குனை= முனை
குன்றவாணர் = வேடர்
குன்றவில்லி = சிவன்
குன்றெறிந்தோன் = முருகன்
குன்றேந்தி = திருமால்
குன்மை = அவமானம், பழி
குன்னத்தல் = கூனிப்போதல்

கூ


கூ = பூமி, கூவுதல், ஏவல்
கூகை = ஒருவகைக் கொடி, ஆந்தை, கோட்டான்
கூச்சு = கூரிய முனை, புளகம்
கூடகம் = வஞ்சனை
கூடசன் = திருட்டுமகன்
கூடந்தன் = ஆன்மா
கூடமார்க்கம் = கள்ளவழி
கூடம் = கொல்லன், சம்மட்டி, அரை, வீடு, சாலை, பொய், நகரவாயில், மறைவு, இரகசியம், வஞ்சகம், மலையுச்சி
கூடலர் = பகைவர்
கூடல் = மதுரை, புணர்ச்சி, பொருத்து, தோப்பு
கூடல் நாயகன் = சொக்கநாதன்
கூடாங்கம் = ஆமை
கூடார் = பகைவர்
கூடாவொழுக்கம் = தவ ஒழுக்கத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம்
கூடு = உடல், அடைப்பு , உறை, பறவை, புழு முதலியவற்றின் கூடு
கூடுவிட்டுக்கூடு பாய்தல் = ஒரு சரீரத்தைவிட்டு மற்றொரு சரீரத்தில் புகுதல்
கூட்டரவு = கூட்டம், சகவாசம்
கூட்டு = துணை, நட்பு, உறவு, திரள், கலப்பு
கூதல் = குளிர்
கூதளம் = தூதுளை
கூதறை = முறைமை இல்லாதவன், இழிந்தது, கிழிந்தது
கூதாளி = தூதுளை
கூதிர் = பனிக்காற்று, ஒரு பருவம்
கூதிர்காலம் = குளிர்காலம்