பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144



கூளியர்

கூளியர் = வேடர், வழிபறி கொள்ளையர், வணங்கி நிற்பவர், படைவீரர், ஏவலாளர்
கூறு = தன்மை, பங்கு, பாதி, வகை, பிரிவு, சொல்லல்
கூறுதல் = விற்றல், சொல்லுதல்
கூறை = சிலை, புது ஆடை
கூற்றம் = சொல், எமன், நாட்டின் பகுதி
கூற்று = சொல், நமன், காலன், கொலைத் தொழில்
கூற்றுவன் = நமன்
கூனல் = சங்கு, வளைவு
கூனி = வானவில், பங்குனி
கூனிரும்பு = அரிவாள்
கூனை = மிடா
கூன் = நத்தை, ஆந்தை, பெரும்பாத்திரம், வளைவு
                    
                    
கெக்கலி = மகிழ்வு
கெச்சை = முல்லை,
கெடவரல் = மகளிர் விளையாட்டு, மகளிர் கூட்டம்
கெடி = ஊர், பயம், கீர்த்தி, வல்லமை, செல்வாக்கு
கெடு = தரித்திரம்
கெண்டை = சேல்மீன்
கெதாயு = இறந்தவன்
கெத்து = உபாயம், தந்திரம்
கெபி = குகை, வளை, குழி, கந்தகம், பாம்பு
கெம்பீரம் = ஆழம், வீரம், மேன்மை
கெம்புதல் = ஆரவாரம் செய்தல்

  1. 44





கெவுரா = துளசி
கெவுரிசங்கம் = இரட்டை உருத்திராட்சம்
கெவுளி = பல்லி, சிவந்த சங்கு
கெவுனி = பட்டண வாயில்
கெழி = நட்பு
கெழு = நிறம், பொருந்திய
கெழுதகை = உரிமை, நட்பு
கெமுழுதல் = கூடுதல், நிறைதல், பொருந்துதல்
கெழுமை = பிசாசம், நிறம், வளமை
கெழுமுதல் = நிறைதல், பொருந்துதல்
கெழுவு = நட்பு