பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152


கொன்றை


கொன்றை = கொன்றை மலர், ஒருபண் கொன்றைசூடி = சிவன் கொன்னானர்= பாவிகள், பயனற்றவர்

கோ



கொன்னே= வீணே கொன்னை =திருந்தாத வார்த்தை


கோ

கோ = அரசன், தந்தை, நீர், அம்பு, ஆகாயம், மயிர், பெருமை, கண், கிரணம், சந்திரன், மலை, குயவன், சூரியன், திசை, சொல், பசு, பூமி, வச்சிராயுதம், தலைமை கோகத்தி = பசுக்கொலை கோகநதம் = செந்தாமரை, ஆம்பல்மலர் கோகநதை = இலக்குமி கோகம் = செந்நாய்,சக்கரவாகப் பறவை, தவளை, உலர்ந்தபூ கோகயம் = தாமரை கோகரணம் = பசுவைப்போல் காதை அசைக்கும்வித்தை கோகனதம் = தாமரை கோகழி = திருவாடுதுறை, திருப்பெருந்துறை கோகிலம் = குயில், குரங்கு, பல்லி,துளை,இலந்தை,கரி, உலக்கை, கலப்பை, கிளி கோகு = தோள், வஞ்சகம், கழுதை கோகுடி - ஒருவகை மலர் கோகுலம் = இடையர்குலம், இடைச்சேரி, பசுக்கொட்டில் கோக்கள் = பசுக்கள்,சிறந்தவர்கள், அரசர்கள் கோங்கம் = நெல்லி கோசம் = உறை, புத்தகம், கருப்பை, பொன், வீதி, பொக்கிஷம், மதிலுறுப்பு, முட்டை கோசரம் = அடங்கல், ஊர், பொறி உணர்ச்சி, பூத்தாது, அறியத்தக்கது, கோத்திரம் கோசர் = கொங்குமண்டலத்தரசர் கோசிகம்=சீலை, பட்டுச்சீலை, கூகை கோசிகன் = விசுவாமித்திரன் கோசு = தெரு, தோல்வி கோடகம் = குதிரை,பல தெருக்கள் கூடும் இடம், புதுமை, நாற்சந்தி, மயிர்முடி