பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175



சிக்கம் 175 =சிதார்

சிக்கம் = உச்சி, குடுமி, சிறை சீப்பு, உறி, வலை
சிக்கர்=கள்
சிக்கி=நாணம்
சிக்கு= சந்தேகம், தடை, உறுதி
சிக்குரு = முருங்கை
சிக்கென= உறுதியாக, விரைவாக
சிங்கநோக்கு = சிங்கத்தின் முன் பின் பார்வை
சிங்கல் குறைதல் , கெடுதல்
சிங்கவாகினி = பார்வதி, துர்க்கை
சிங்கன் = குறவன்
சிங்கி = விஷம், பின்னல், குறத்தி, மான்கொம்பு, சுக்கு
சிங்ஙுகை = நா
சிசிரம் = பின்பனிகாலம், குளிர்
சிசுமாரம் = முதலை
சிசுருக்ஷை = குற்றேவல், தொண்டு
சிச்சிலி = மீன் குத்திப்பறவை
சிஞ்சம் = புளியமரம்
சிஞ்சினி = வில் நாண்
சிஞ்சை = முழக்கம், புலி
சிட்சித்தல் = தண்டித்தல், போதித்தல்
சிட்சை = பயிற்சி, தண்டனை
சிட்டபரிபாலனம் = நல்லோரைக்காத்தல்
சிட்டம் = பெருமை, சிரேஷ்டம், பொறுமை, நல்லறிவு
சிட்டன் = ஞானி, மாணாக்கன்
சிஷ்டாசாரம் = மேலோர் ஆசாரம்
சிட்டி = கட்டளை, மட்கலம், சிருட்டி
சிட்டை = ஒழுங்கு
சிணுங்கல் = மழை தூறல், கொஞ்சுதல், அழுதல்
சிண்டி = குடுமி, தலை மயிர்
சிதகம் = தூக்கணங் குருவி
சிதடன் = அறிவில்லான, குருடன்
சிதடு = பேதமை, குருடு
சிதம் = ஞானம், நட்சத்திரம், வெண்மை, வெற்றி
சிதர் = உறி, வண்டு, சிலை, மெத்தெனல், மழைத்துளி, திவலை, பூந்தாது
சிதலை = கறையான், நோய், சிலை
சிதவல் = கந்தைத்துணி, தேரின் கொடி, வெட்டுதல்
சிதறி = மழை
சிதன்= சுக்கிரன்
சிதாகாசம் = ஞானாகாசம்
சிதாத்மா = கடவுள்
சிதாபாசன் = சிவன்
சிதார் = மரவுரி, கந்தைத்துணி