பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீயம்

181

சீற்றம்





சீயம் = சிங்கம்
சீரகத்தாரோன் = குபேரன்
சீரம் = பரவுரி, கலப்பை, பால்
சீரியர் = செல்வர், நல்லோர்
சீருணம் = செம்பு
சீருள் = ஈயம், செம்பு
சீரை = சீலை, தராசு, இசைப்பாட்டு, மரவுரி
சீர் = அழகு, அளவு, ஒழுங்கு சிறப்பு, செல்வம், தராசு, நன்மை, பாரம், புகழ், பெருமை, அளவு, தாளம்
சீர்தூக்குதல் = ஆராய்தல்
சீர்த்தல் = சிறப்புக்கொள்ளல், கோபித்தல்
சீர்த்தி = மிகுபுகழ்
சீர்மை = கீர்த்தி, சிறப்பு, செம்மை
சீலம் = குணம், நடை, யானையைப் பயிற்றுதல், சுபாவம், பழக்கம், நல்லறிவு, நல் ஒழுக்கம்
சீவ = நெடிது வாழ்க
சீவகர் = புத்த தவசிகள்
சீவகளை = உயிர்ப்பு
சீவசாட்சி = அறிவுக்கு ஆதாரமாய் இருப்பது
சீவதசை = சீவித்திருக்கும் காலம்
சீவதம் = ஆமை, சீவன், மயில், மேகம்
சீவத்தி = பாலைமரம்
சீவரட்சை = சீவனைக்காத்தல்
சீவரம் = காவியாடை
சீவனம் = நீர், வெண்ணெய், உயிர்வாழ்க்கை
சீவனீயம் = நீர்
சீவன் = வியாழ பகவான், உயிர்
சீவன்முக்தன் = உயிரொடு வாழும் பொழுதே உலகப் பற்றைக் கடந்த
மெய்ஞ்ஞானி
சீவன்முக்தி = உயிர் உடலில் உள்ளபோதே மோட்சம் அடைதல்
சீவன்மா = உயிர்
சீறடி = சிறியபாதம்
சீறியகற்பு = மறக்கற்பு
சீறு = கோபம்
சீறூர் = வேடர், ஊர்
சீற்றம் = கோபம்