பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184


சுமார்த்தர் 184 சுருதி


சுமார்த்தர்= ஸ்மிருதிவழி நிற்போர் சுமாலி = கள் சுமைதலை = பொறுப்பு சுமையடை = சும்மாடு சும்பனம் = முத்தமிடல் சும்புளித்தல் = ஒளியால் கண் கூசல் சும்மை = ஒலி, ஊர், சுமை, நகர், நாடு, நெற்போர் சுயஞ்சோதி = கடவுள் சுயம்பு = வேதம், கடவுள், தானாக உண்டாதல் சுயம்வரம் = தானாகக் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளல் சுயாதீபதி = சக்கரவர்த்தி சுயோதனன் = துரியன் சுரகுரு = வியாழன் சுரதம் = அன்பு, புணர்ச்சி, இனிமை சுரநதி = ஆகாய கங்கை, கங்கை, சுரபி = கபிலை, வசந்த காலம், பொன், அழகு,மல்லிகை, வாசனை சுரம் = அருநெறி, வழி, கள், காடு, பாலை, நிலம், இசை சுரம் போக்கு = பாலையில் செல்லல் சுரர் = தேவர் சுரன் = சூரியன், தேவன், அறிஞன் சுறா = கள் சுறாபகை = கங்கை சுராலயம் = மேரு தேவர், உலகு சுரி = முறுக்கு, சுழற்சி, நரி, துளை சுரி குழல் = சுருண்ட மயிர் சுரிகை = உடைவாள், கவசம் சுரிதகம் = தலையணி சுரிமண் = சேறு சுரிமுகன் = சங்கு, நத்தை சுரியல் = மயிர், வளைவு, நீர்ச்சுழி சுருக்கம் = வறுமை, சிறுமை, குறைவு, சுருங்கல், சங்கிரகம் சுருக்கு = வலை, நெய்த்துடுப்பு, சுருக்கம், கட்டு, பூமாலை வகை, குறைவு, விரைவு சுருங்கு = சலதரை, சாக்கடை சுருங்கை = கரந்த படை, கோட்டைக்கள்ள வழி, மதகு, நுழைவாயில், சாளரம் சுருணை = பூண், சுருள் சுருதி = காது, இசை, சுரம், சுதி, வேதம், கேள்வியறிவு