பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191


செந்தாது191
செந்தாது = பொன்
செந்தி = திருச்செந்துார்
செந்திரு = இலக்குமி
செந்தில் = திருச்செந்தூர்
செந்திறம் = தெளிவு, சிவப்பு
செந்தினை = கம்பு
செந்தீவண்ணன் = சிவன்
செந்து = அணு, நரி, பிராணி
செந்தொடை = அம்புயெய்யும் குறி, சிவப்பு மாலை
செந்நீர் = இரத்தம், புதுவெள்ளம்
செபம் = தந்திரம், பிரார்த்தனை
செபித்தல் = மந்திரம் உச்சரித்தல், மன்றாடுதல்
செம்பட்டை = சிறகு
செப்பம் = வீதி, வழி, நெஞ்சு, நடுநிலை, கூர்மை, செவ்வை
செப்பு = சொல், விடை,சிமிழ்
செப்புப்பட்டயம் = செம்புத் தகட்டில் எழுதிய உறுதிச்சாசனம்
செமித்தல் = பொறுத்தல், பிறத்தல், சீரணித்தல்
செம்பாகம் = இனிமை, சரிபாதி
செம்பாம்பு = கேதுக்கிரகம்
செம்பால் = இரத்தம்
செம்பியன் = சோழன்
செம்புயிர் = மாக்கள் உயிர்
செம்புலம் = போர்ப்பூமி, நல்லபூமி
செம்புள் = பருந்து
செம்புனல் = இரத்தம்
செம்பூறல் = செம்பிற்களிம்பு
செம்பொருள் = கடவுள், உண்மைப்பொருள்
செம்போத்து = கள்ளிக்காக்கை
செம்மருதல் = சந்தோஷம் அடைதல்
செம்மலர் = நெற்றிமாலை
செம்மல் = தலைமை, புதல்வன், அரசன், கடவுள், பெருமை, பழம்பூ, வலி, நீர் , பெருமையில் சிறந்தோன்
செம்மாத்தல் = இறுமாத்தல், மிகக்களித்தல்
செம்மான் = சக்கிலியன்
செம்மீன் = அருந்ததி
செம்முதல் = மூடுதல், பரவுதல், வீங்குதல்
செம்மை = தலைமை, ஒழுக்கம், நடுவுநிலைமை, பெருமை, நேர்மை, செவ்வை, சிவப்பு, முறைமை
செம்மொழி = ஒருபொருள் தரும் வார்த்தை, நன்மொழி
செயந்தி = திருச்செந்துார்
செயலறவு = வலியின்மை
செயலை = அசோகமரம்