பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாபம்

212


தாபம் = துன்பம், வெப்பம், காடு
தாமசம் = இருள்
தாமணி = மாட்டுத்தும்பு, கயிறு
தாமம் = ஊர், இடம், யானை, ஒளி, கயிறு, ஒழுங்கு, சார்பு, பிறப்பு, பூ, மலை, மணிமாலை, கொன்றை, பரமபதம்
தாமரசம் = பொன், தாமரை
தாமரைக்கண்ணன் = விஷ்ணு
தாமணி = பசுக்கட்டும் கயிறு
தாமன் = சூரியன்
தாமிரம் = செம்பு
தாமோதான் = திருமால்
தாம்பு = கயிறு
தாயகம் = ஈகை, அடைக்கலம்
தாயம் = உரிமை, இடம் நாடு, தந்தை வழி வந்த சுற்றம், சூதாடு கருவி, பிதிராச்சிதம்
தாரகம் = பிரணவம், ஆதாரம், நட்சத்திரம்
தாரகன் = தாங்குபவன்
தாரகாபதி = சந்திரன்
தாரகை = நட்சத்திரம், கண்மணி
தாரணம் = தரித்தல், நிலைத்திருத்தல்
தாாணி = பூமி, மலை, இயமன்
தாரனை = தரித்தல், உறுதி, புலனடக்கல்
தாம் = நா, அரும்பண்டம், பிரணவம், மனைவி, வெள்ளி, பார்வை, ஒரு வீணைநரம்பு, முத்து
தாரா = நட்சத்திரம்
தாராகணம் = நட்சத்திரக்கூட்டம்
தாராதரம் = மேகம்
தாராபதி = சந்திரன்
தாாி = வழி, தாங்கியிருப்பவன், முறைமை, வண்டொலி
தாரு= மரம்
தாருகாரி = முருகன், தாருகனைக் கொன்றவன்
தாருணம் =அச்சம், கூச்சம், துக்கம்
தாருண்ணியம் = இளம்பருவம்
தாரை = கண்மணி, காளம், கீர்த்தி, கூர்மை, தேர் ஒடல், நீர் ஒழுக்கு, பெரு மழை, நட்சத்திரம், கூந்தற்பனை, குருபத்னி
தாரைவார்த்தல் = தத்தம் பண்ணி நீர்விடுதல்
தாா் = மாலை, பூ, முன்சேனை, கயிறு, ஒழுங்கு, குலை, உபாயம், பிடரிமயிா்
தார்க்கியன் = கருடன்