பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீ


தீ = தீமை, நெருப்பு, அறிவு, கோபம், இனிமை
தீக்கதர் = தீட்சை பெற்றோர்
தீக்குளித்தல் = தீப்பாய்தல்
தீக்கை= மந்திரோபதேசம்,யாகம்
தீக்கோள் = தீய கிரகம்
தீஞ்சுவை = நற்சுவை
தீஞ்சொல் = இனிய சொல்,நல் சொல்
தீட்சணம் = உக்கிரம், கூர்மை, வெப்பம், மரணம்
தீட்சை = விரத நியமம், உபதேசம்
தீட்சை பண்ணுதல் = உபதேசம் செய்தல்
தீட்டுதல் = எழுதுதல், சித்தரித்தல், மினுக்குதல்
தீட்பு = இழிவு
தீத்தல் = எரித்தல்
தீத்திரள் = ஊழித்தீ
தீத்தொழில் = அக்கினி, தகாத செயல்
தீந்தமிழ் = இனைய தமிழ்
தீந்தொடை = யாழ், தேன் அடை
தீபகம் = விளக்கு
தீபனம் = பசி, ஆகாரம்
திபாவலி, தீபாவளி = விளக்கு வரிசை,ஒரு பண்டிகை
தீபிகை = விளக்கு
தீம் = இனிமை, தித்திப்பு
தீம்பு = கேடு, குறும்பு
தீரம் = கரை, அம்பு, தைரியம்
தீர்க்கக்கிரீவம் = ஒட்டகம்
தீர்க்கதரிசி = முக்கால நிகழ்ச்சிகளை அறிபவன், வருவதுணரும் ஞானி
தீர்க்கம் = உறுதி, நீளம், தெளிவு, பூரணம், அறிவுத் தெளிவு
தீர்க்காயுசு = காகம், நீண்ட ஆயுள்
தீர்த்தங்கரர் = சைனமதாச்சாரியர்
தீர்த்தம் = சுத்தம், யாகம்,சாத்திரம், அபிடேக நீர், புண்ணிய நீர், ஆகமம்
தீர்த்தர் = பரிசுத்தர்
தீர்த்தன் = அருகன், குரு, சிவன், பரிசுத்தன்
தீர்த்தகை = நதி
தீர்வு = பிராயச்சித்தம்
தீர்வை = கீரி, முடிவு, சுங்கம்
தீவகச் சாத்தி = இந்திரவிழா
தீவகம் = விளக்கு, தீவு, பார்வை, மிருகம்
தீவலம்செய்தல் = திருமணம்
தீவளர்த்தல் = ஹோமம் செய்தல்
தீவளர்ப்போர் = அந்தணர்
தீவரணம் = அரசாட்சி, நியாய சபை