பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துமித்தல்

222

துருவண்ணம்



துமித்தல் = அறுத்தல், துளித்தல், வெட்டுதல், விலக்குதல் துமிலம் = முழக்கம், போர், தும்பி = யானை, வண்டு,கரும்பு தும்பு = கயிறு, குற்றம்,கரும்பு, தூசி துடம்புறு = வீணை, ஒரு கந்தருவன் தும்பை = போர், ஒரு செடி. துயக்கம் = அறிவு வேறுபடுதல், சோர்தல் துயலுதல் = அசைதல்,தொங்குதல் துயிலுணர்தல் = விழித்தல் துயிலெடை = உறக்கத்லிருந்து எழுப்புதல் துயில் = உறக்கம், தங்குதல், கனா, சாவு, துணி துயில்கூர்தல் = உறங்குதல் துயிறல் = உறங்குதல, தங்குதல் துய் = பஞ்சு, மென்மை,கூர்மை துய்த்தல் = புசித்தல், அனுபவித்தல், நூல் கற்றல் துய்யது = சுத்தமானது துய்யாள் = சரஸ்வதி துரகதம் = குதிரை துரக்கு = சந்தேகம் துரகம் = குதிரை, மனம் துரங்கமம் = குதிரை துரங்கம் = குதிரை, மனம் துரத்தல் = எரிதல், ஒட்டுதல், செலுத்தல், முயலுதல், துரத்தல் துரந்தரதன் = தலைவன் துரப்பு = நீக்குதல் துரம் = ஓரிசைக் கருவி, சுமை, பொறுப்பு துராக்கிருதம் = தீயதொழில், நிந்தை துராசாரம் = தீய ஒழுக்கம் துரால் = செத்தை துரிசு = குற்றம், துன்பம் துரிதம் = பாவம், விரைவு துரியம் = பரமாத்மா, தன்மயமாய் நிற்பது, சிரேஷ்டம், பொதிமாடு,சுமத்தல் துருக்கம் = அரண், காடு, குங்கும மரம், கத்தூரி, மதில், கலக்கம் துருசு = மாசு துருத்தி = காற்றுத்துருத்தி, ஆற்றிடைக்குறை, தோல் துருநாமம் = மூலநோய் துருமம் = மரம், பாரிசாதம் துருமோற்பலம் = கோங்கு மரம் துருவண்ணம் = வெள்ளி