பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாதம்

244

நாரன்


நாதம் = இந்திரியம், ஒலி, இசை, தத்துவம் நாதன் = குரு, தலைவன், கணவன், கடவுள், அரசன் நாதித்தல் = ஒலித்தல் நாத்தழும்பேறுதல் = நாக்கு நல்ல பயிற்சி பெற்றிருத்தல் நாத்தி = இன்மை, நாசம் நாத்திகம் = தெய்வம் இல்லை என்னும் மதம் நாநா = பல நாந்தகம் = வாள் நாந்தல் = ஈரம், மந்தாரம் நாந்தி = பாயிரம், மங்கல வாழ்த்து நாபி = கஸ்தூரி, தொப்பூழ் நாபிதன் = அம்பட்டன் நாப்பண் = நடு நாப்பு = பரிகாசம் நாமகரணம் = பெயர் இடும் சடங்கு நாமகள் = சரஸ்வதி நாமசேடம் = மரணம் நாமடந்தை = சரஸ்வதி நாமதேயம் = பெயர் நாமநீர் = கடல் நாமமிடுதல் = பெயர் வைத்தல் நாமம் = பெயர், திருமண், அச்சம், புகழ் நாமயம் = தற்போதம் நாமாவளி = பெயர் வரிசை நாம் = அச்சம் நாம்பல் = இளைத்தல் நாம்பு = மெலிவு நாயகம் = ஆளுகை, தலைமை, சிவப்பு நாயகமணி = நடுமணி நாயகன் = கணவன், கடவுள், அரசன், தலைவன் நாயகி = தலைவி, மனைவி நாயக்கன் = சேனைத் தலைவன் நாயனம் = நாதசுரம் நாயனார் = தலைவர் நாயன் = தலைவன், பெருமையிற் சிறந்தவன் நாயன்மார் = சிவனடியார்கள், பெருமையிற் சிறந்தவர்கள் நாயிறு = சூரியன், ஒரு கிழமை நாய் = சூதாடு கருவி, நாய் நாய்கன் =செட்டி, தலைவன் நாய்ச்சி = தலைவி நாரணன் = திருமால் நாரணி = துர்க்கை, பார்வதி நாரம் = நீர், பாசி, மக்கள் கூட்டம் ,அன்பு நாரன் = மன்மதன்