பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாே


நாே = துன்பம், வியாதி நாேக்கம் = எண்ணம், அழகு, காவல், அறிவு, பார்வை, கண், விருப்பம் நாேக்கன் = கழைக்கூத்தாடி நாேக்கு = அழகு, எண்ணம், கண், அறிவு நோக்குதல் = காத்தல், கருதல், பார்த்தல் நோட்டம் = விலை, மதிப்பு நாேதல் = துன்புறல், இரங்குதல், வறுமைப்படல் நாேப்பாளம் = கோபம் நாேய் = வருத்தம், நோய், துன்பம் நோய்முகன் = சனி நோலாதார் = தவம் இல்லாா், பாெறுமையில்லாா் நோலாமை = தவம் இன்மை, பாெறாமை நாேலுதல் = நாேற்றல், பொறுத்தல் நாேலை = எள்ளுருண்டை நாேற்பு = தவம், பொறுத்தல் நோற்றல் = பொறுத்தல், தவம்செய்தல் நோனாமை = பொறாமை நாேனாா் = தவம் இல்லார், பொறுமை இல்லார் நாேனுதல் = தவம்செய்தல், பொறுத்தல் நோன்பு = தவம், விரதம் நாேன்மை = பொறுமை, தவம், வலிமை நாேன்றல் = பாெறுத்தல், தள்ளல் நாேன்றான் = வலியகால்

நெள


நெள = மரக் கலம் நெளவி = மான்