பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலை

284

பாறு




பாலை
= நீரோட்டம், பிரிவு, வெப்பம், பெண்குழந்தை,
மணல் நிலம், ஒருமரம், ஒரு பண்
பாலைக்கிழத்தி = துர்க்கை
பால் = இடம், இயல்பு, ஊழ், குணம், திசை, பகுதி, பக்கம், பங்கு, நன்னெறி, பாதி, முலைப்பால், சாறு, வெண்மை, குலம்
பால்மாறுதல் = சோம்பி இருத்தல்
பாவகம் = கருத்து, தூய்மை, உருவம், அக்கினி, பாவனை, அபிநயம், தியானம், தோற்றம், மச்சுவீடு
பாவகன் = அக்கினி, தூய்மை செய்பவன்
பாவகாரி = பாவம் செய்பவன்
பாவகி = முருகன்
பாவநிவாரணம் = பாவம் நீக்குதல்
பாவமூர்த்திகள் = வேடர்கள்
பாவம் = மெய்ப்பாடு, விளையாட்டு, அபிநயம், கருத்து, தீயசெயல்
பாவல் = பரவுதல், பாத குறடு
பாவனன் = பீமன், அனுமான்
பாவனாதீதம் = பாவனைக்கு எட்டாதது
பாவனி = கங்கை, பசு
பாவனை = எண்ணம், தியானம், அபிநயம்
பாவாடம் = நாவை அறுத்துக் கொள்ளும் பிரார்த்தனை
பாவாடை = கோலம், நிலச்சீலை, ஆடைச்சோறு
பாவித்தல் = எண்ணுதல், பாவனை செய்தல், தியானித்தல்
பாவை = பெண் பொம்மை, ஒரு நோன்பு
பாழி = அகலம், குகை, சிறுகுளம், போர், பாழ், வலி, விலங்கு, முனிவர் வாசம், பெருமை, தூங்குமிடம், கோயில், ஊர், நகரம், வீடு, குகை, பகைவர் ஊர்
பாளிதம் = குழம்பு, கற்பூரம், பால்சோறு, பட்டுப் புடவை
பானை = கருப்பருவம்
பாளையப்பட்டு = பாளையக்காரர்களுக்கு விடப்பட்ட கிராமக்கூட்டம்
பாளயம் = பாசறை, சேனை
பாறல் = எருது
பாறு = பருந்து, மரக்கலம், கழுகு