பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பீடித்தல்

293

புகலுதல்


பீடித்தல் = துன்புறுத்தல்
பீடிப்பு = வருந்துகை
பீடு = பெருமை, வலி, ஒப்பு
பீட்டை = இளங்கதிர்
பீதகம் = பொன், வெட்டி வேர், மஞசள்
பீதசாலம் = வேங்கைமரம்
பீதம் = பொன், பொன்நிறம்
பீதன் = சூரியன், குடிப்பவன், அஞ்சுபவன்
பீதாம்பரம் = பொற்புடவை
பீதாம்பரன் = விஷ்ணு
பீதி = அச்சம், வேதனை செய்யும் நோய்
பீதை = பொன்னிறப் பூவுள்ள மருதோன்றி மரம்
பீபற்சு = அருச்சுனன்
பீமம் = அச்சம், பெருமை
பீமன் = சிவன், வீமன்
பீரம் = வாகை, பீர்க்கு, தாய்ப்பால், வீரம்
பீரு = அச்சமுள்ளோன், புருவம்
பீர் = அச்சம், பெருக்கு, பசலை, பிர்க்கு, முலைப்பால்
பீலி = ஆலவட்டம், சிறு சின்னம், மயிற்றோகை, மாதர் காலணி, பனங்குருத்து, மதில்
பீலிக்குஞ்சம் = அலங்காரத் தொங்கல்
பீலு = அச்சமுடையோன், அணு
பீழித்தல் = வருத்துதல்
பீழை = துன்பம்
பீழ்த்தல் = பிடுங்குதல்
பீள் = கர்ப்பம்
பீனசம் = மூக்கடைப்பு, நோய்
பீனம் = பருமை, பெருமை

பு


புகடுதல் = வீசியெறிதல்
புகட்டல் = உட்புகுத்தல், பருகச்செய்தல்
புகரோன் = சுக்கிரன்
புகர் = கபிலநிறம், குற்றம், சுக்கிரன், நிறம், அழகு, ஒளி, புள்ளி, கறை
புகர்முகம் = யானை, ஒரு பாணம்
புகலி = சீர்காழி, புதுக்குடி
புகலிடம் = ஊர், கஞ்சம்
புகலுதல் = சொல்லுதல், விரும்புதல், தெரிதல், மகிழ்தல், ஒலித்தல்