பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= பசு, எருமை, எருது, ஆச்சாமரம், மழை, வகை
ஆகடியம் = அநியாயம், பரிகாசம், கொடுமை
ஆகண்டலன் = இந்திரன்
ஆகம் = உடம்பு, மார்பு, மனம்
ஆகமநம் = வருதல்
ஆகமம் = வருகை, முதல் நூல், தரும நூல், முதல்வன் வாக்கு
ஆகம்பிதம் = நடுக்கம்
ஆகசம் = வீடு,உரைவிடம், சுரங்கம்
ஆகருடணம் = கவர்தல், இழுத்தல்
ஆகவநீயம் = யாகத்தில் கிழக்கில் வைக்கும் அக்கினி
ஆகவம் = போர், வில், சிலை
ஆகாச கமநம் = ஆகாசத்தில் போதல்
ஆகாமியம் = வரும் கருமம், இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள்
ஆகாரம் = உடம்பு, வடிவு, நெய்
ஆகாறு = பொருள், வரும் வழி
ஆகிருதி = உடம்பு, வடிவு
ஆகு = எலி, பெருச்சாளி, கொப்பூழ்
ஆகுதி = பலி, ஓம அவி
ஆகுலம் = ஆரவாரம், துன்பம், கலக்கம்
ஆகுலித்தல் = ஆரவாரித்தல், அழுதல், துன்புறுதல்
ஆகுளி = சிறுபறை
ஆகூழ் = நல்வினைப்பயன்
ஆகோள் = பசுவினைக் கவர்தல்
ஆக்கம் = சிருஷ்டிப்பு, இலக்குமி, இலாபம், செல்வம், வாழ்வுபெருக்கம், ஆசி, உயர்வு, பொன், நுகர்பொருள், பருவம், கொடிப்படை
ஆக்கம் கூறல் = வாழ்த்துக் கூறல்
ஆக்கல் = உயர்த்தல்,சமைத்தல், பழக்கல், படைத்தல்
ஆக்கிநேயம் = அக்கினி சம்பந்தமானது, தென் கீழ்திசை, ஓர் அத்தி மரம், ஒரு புராணம், ஓர் ஆகமம்
ஆக்கியாநம் = கட்டுக்கதை
ஆக்கிரகம் = மிகுபற்று, கடுங்கோபம், விடாப்பிடி, உறுதி, வீரம்
ஆக்கிரமம் = எதிர்த்தல், கடத்தல்