பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்குதல்

308

பொதுவர்


பொங்குதல் = கோபித்தல், கிளர்தல், மிகுத்துக் காட்டல், துள்ளுதல், செருக்குதல், விளங்குதல், விரைதல், செழித்தல்,கொதித்தல் பொசிதல் = கசிதல், வெளியாதல் பொசித்தல் = உண்ணல் பொச்சம் = பொய், குற்றம் பொச்சாத்தல் = மறத்தல், இகழ்தல் பொச்சாப்பு = மறதி, குற்றம் பொச்சாவாமை = மறவாமை பொச்சை = காடு, மலை, குற்றம் பொச்சையர் = அறிவிலார் பொடி = விபூதி பொடிதல் = மயிர்சிலிர்த்தல், தூளாதல், தீய்தல், ஒளி மழுங்குதல், கெடுதல், வெறுத்தல் பொடித்தல் = தோற்றுதல், அரும்புதல், விளங்குதல், வெறுத்தல், புளகித்தல், முளைத்தல் பொட்டணம் = சிறுமூட்டை, ஒத்தடம் பொட்டல் = வெளியிடம், பாழிடம் பொட்டி = வேசி, வெறுக்கத்தக்கவன் பொட்டெழுதல் = அழிவுறுதல் பொதி = காடு, பொதியமலை, தொகுதி, உடல், நெல், கட்டு, குலை, மூட்டை, மூட்டை, அரும்பு, பட்டை பொதிதல் = நிறைதல், சேமித்தல், மறைதல், கட்டுதல் பொதியமுனி = அகத்திய முனிவர் பொதியம் = பொதிகைமலை பொதியல் = அம்பலம், ஒரு மலை பொதியறை = கீழ் அறை பொதியில் = அம்பலம், பொதிகைமலை பொதிர்த்தல் = வீங்குதல், நடுங்குதல் பொதிர்த்தல் = குத்துதல், முரித்தல், பருத்தல் பொதிர்ப்பு = அச்சம், நடுக்கம் பொது = சபை பொதுக்குதல் = மறைத்தல், விலக்குதல், கவர்தல் பொதுங்குதல் = வருந்துதல் பொதுத்தல் = துளைத்தல், முன்பாய்தல் பொதுமகள் = வேசை பொதும்பர் = இளமரச்சோலை, மரப்பொந்து பொதும்பு = குறுங்காடு,சோலை,குகை, மரப்பொந்து பொதுவர் = இடையர் பொதுமகளிர், நடுவர்