பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மடமை

317

மணம்



மடமை
= அறியாமை, அழகு, கோயில், பேதைமை, குளம், மென்மை, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, இளமை, மடமை, முனிவர் வாசம்
மடல் - பனை ஏடு, பூ இதழ், நீற்றுக்கலம், தோள் மேலிடம், கண்ணிமை, கை, பனங்கருக்கால் ஆன ஊர்தி, கமுகு, ஒலைமடல்
மடலூர்தல் = மடலேறுதல், மடற் குதிரையிவர்தல்
மடவரல் = இளம் பெண், மடப்பம்
மடவளாகம் = கோவிலைச் சூழ்ந்த வீதி
மடவாயம் = மகளிர் விளையாட்டுக் கூட்டம்
மடவார் = அறிவீனர், பெண்கள்
மடவியர் = பெண்கள்
மடி = அடங்கல், கேடு, சோம்பல், தாழை, நோய், பொய், வயிறு, பசுவின் மடி, புலம்பு, ஆசாரச்சீலை
மடிதல் = தங்குதல், சோம்பியிருத்தல், சாதல் கெடுதல், முயற்சியறுதல்
மடிமை = சோம்பல்
மடியில் = கூடாரம்
மடியுறு = விம்மிதம்
மடிளை = தழை
மடு = நீர்நிலை, ஆற்றிடைப் பள்ளம்
மடுத்தல் = உண்ணல், தீ மூட்டல்
மடுவு = கேடு, சாவு, சோம்பு
மடை = சோறு, சமைக்கை, துவாரம், பலி, மதகு, ஆணி, முட்டுவாய், இடைப்படுதல், நீரணை
மடைத்தொழில் = சமையல் வேலை
மடைநூல் = பாகசாஸ்திரம்
மடைப்பள்ளி = அடுக்களை வேலை செய்யும் இடம்
மடைவேலை = சமையல் வேலை
மட்குதல் = ஒளிமழுங்குதல், வலி குன்றல், மயங்கல்
மட்டம் = கள்
மட்டித்தல் = பூசுதல், அழித்தல், பிசைதல்
மட்டு = மணம், தேன், அளவு, எல்லை, கள்மிதம்
மட்பகை = மட்கலம் அறுக்கும் கருவி
மட்பகைஞன் = குயவன்
மணத்தல் = காழ்தல், கூடுதல், மோத்தல், வேட்டல், பொருந்துதல்
மணம் = கலியாணம், கூடுதல், வாசனை