பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மராளம்

322

மர்த்தனம்


மராளம் = அன்னம், இருள் மரிக்கை = இறத்தல் மரிசி = புதுவரம்பின்வழி மரியவர் = பின்பற்றி நடப்பவர் மரியாதை = வரம்பு, எல்லை, ஒழுக்கம், நீதி, வணக்கம் மரீசம் = மிளகு மரீசனம் = வால்மிளகு மரீசிகை = கானல் மரு = வாசனை, மலை, பாலை நிலம், மணவிருந்து, நீர் அல்லா இடம், மருக் கொழுந்து மருங்கு = இடை,செல்வம், குலம், நூல், தாட்சண்யம், கூறு, வடிவு, பக்கம் மருங்குல் = இடை, பக்கம் மருச்சகன் = அக்கினி மருச்சுதன் = வீமன் மருட்கை = வியப்பு மருட்டுதல் = மாறுபடுதல், ஒத்தல், பயமுறுத்தல் மருண்மா = மதயானை மருதம் = வயலும் வயலைச் சார்ந்த இடமும், வயல், ஒருமரம், காலைப்பண், ஊடல் மருத்து = காற்று, தேவன் மருத்துவம் = வைத்தியம், யாழ் வகையில் ஒன்று மருத்துவர் = அச்சவினி தேவர் மருத்துவன் = இந்திரன், வைத்தியன் மருநிலம் = நீரும் நிழலும் இல்லா நிலம் மருந்தம் = விஷம் மருந்து = ஒளடதம், தேவாமுதம் மருபூ = பாலைநிலம் மருப்பு = யானைத்தந்தம், யாழ்த்தண்டு, தந்தம் மருமம் = மார்பு, இரகசியம், உயிர்நிலை மருமான் = மருமகன், வழித்தோன்றியவன் மருவலர் = பகைவர் மருவல் = அணைதல், கலத்தல், சிதைதல், கிட்டல் மருவார் = பகைஞர் மருளுதல் = மயங்குதல், வெருவுதல், வியத்தல், ஒப்பாதல் மருள் = பிசாசு, மயக்கம் மரூஉமொழி = சொற்கள் திரிந்துமாறி வழங்கும் மொழி மரை = தாமரை, மான், தவளை, குதிரை மர்க்கடம் = குரங்கு மர்த்தனம் = பிசைதல், கடைதல்