பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவியர்

335

முசலி


முகவியர் = இன்முகம் உள்ளவர் முக விலாசம் = முகச்சிறப்பு முகவுரை = பாயிரம் முகவெட்டு = முகத்தின் அழகு முகவை = மிகுதியாகக் கொடுக்கும் பொருள், ராமநாதபுரம், அகப்பை, நெற்பொலி முகவோலை = அரசர் எழுதும் கடிதம் முகனை = முதன்மை, முனை, முன்புறம், தலைமை முகாந்தரம் = ஏது, மூலம் முதித்தல் = முற்றச் செய்தல் முகிலூர்தி = மேகத்தை வாகனமாகக் கொண்ட தேவேந்திரன் முகில் = மேகம் முகில்வண்ணன் = திருமால் முகிழ் = அரும்பு, குவிதல் முகிழ்த்தம் = முகூர்த்தம் முகிளிதம் = முகிழ், சிறிது, குவிகை முகுடம் = முடி முகுந்தன் = விஷ்ணு முகுரம் = கண்ணாடி, தளிர் முகுளம் = மொட்டு முகூர்த்தம் = சுபவேளை, மூன்றேமுக்கால் நாழிகை முகை = அரும்பு, குகை முகைத்தல் = அரும்புதல் முகோல்லாசம் = முகமலர்ச்சி முக்கட்பிரான் - முக்கட் பெருமான், சிவபெருமான் முக்கண்ணன் = சிவபிரான், விநாயகன், விரபத்திரன் முக்கண்ணி = பார்வதி, காளி முக்கனி = வாழை, மா, பலா முக்காணி = ஒரு சிற்றிலக்கம் முக்காரம் = தாழ்ப்பாள், பிடிவாதம், எருதின் முழக்கம் முக்குடைச் செல்வன் = அருகன் முக்குணம் = இராசதம், தாமசம், சாத்துவிகம் ஆகிய மூன்று குணங்கள் முக்குளித்தல் = முழுகுதல் முக்கூட்டு = அடுப்பு, பரணி முக்கோல் = திரிதண்டு, திருவோணம் முக்கோற்பகவர் = திரிதண்ட சந்நியாசிகள் முங்குதல் = முழுகல், உண்ணல், நிறைதல் முசரு = தயிர் முசலம் = உலக்கை முசலி = உடும்பு, பலபத்திரன்