பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொசித்தல்

348

மோடனம்




மொசித்தல் = தின்னல்
மொச்சை = தீ நாற்றம், ஒரு
மொஞ்சகம் = பீலி
மொஞ்சி = முலை
மொடு = மிகுதி, நயம்
மொட்டித்தல் = குவிதல்
மொட்டு = அரும்பு, தேரின் கூம்பு
மொண்ணன் = வழுக்கைத் தலையன்
மொத்துண்ணல் = அடியுண்ணல்
மொத்தை = பருத்தது, கோட்டான்
மொத்தை = ஒருவகைத் தோல்கருவி, மண்குடுவை
மொய் = பெருமை, போர்க்களம், வலி, யானை, தாய், நெருக்கம், போர், பகை, கூட்டம், மணக்கொடை, வண்டு
மொய்குழல் = பெண்
மொய்த்தல் = நெருங்குதல், மேல்பரவுதல் மூடுதல், கொடுத்தல்
மொய்ம்பு = தோள், வலி
மொழி = பாஷை, சொல், கணு
மொழிமை = பழஞ் சொல்
மொழுப்பு = சோலை சூழ்ந்த இடம், கட்டு

மோ




மோ = மோத்தல்
மோகம் = வேட்கை, தூக்கம், காமமயக்கம், மதியீனம், திகைப்பு, மோர்
மோகரம் = போரொலி, மயக்கம்
மோகரித்தல் = கோபத்தால் பேரிரைச்சல் இடுதல், மயங்குதல், ஆரவாரித்தல்
மோகர் = சித்திரக்காரர்
மோகனம் = மயக்கம், ஒர் இராகம், மயக்கும்வித்தை
மோகனை = மயக்கஞ் செய்பவள்
மோகன் = மன்மதன்
மோக்கம் = பரகதி, விடுகை
மோக்கல் = மொள்ளல்
மோசகன் = விடுவிப்பவன்
மோசனம் = விடுகை, முத்தி, கபடம், விடுதலை அடைதல்
மோடனம் = அவமானம், காற்று, மாயவித்தை