பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

355


வகம் = குதிரை வாகனம் வகித்தல் = பரித்தல், தாங்குதல் வகிர் = பிளந்த துண்டு, கீறு வகிர்தல் = அறுத்தல், போழ்தல், கோதுதல் வகித்திரம் = தெப்பம் வகுணி = ஒலி வகுதல் = பிளத்தல் வகுதி = வகுப்பு வகுத்தல் = கூறு படுத்தல், நியமித்தல், படைத்தல், பகுத்துக்கொடுத்தல் வகுந்து = வழி, கீறுதல் வகுளம் = மகிழமரம் வகை = இனம், உபாயம், உறுப்பு, கூறுபாடு, சிறுதெரு, வழி, விதம், தன்மை, திறம், பயன் வகையுனி = சொல் சிதைந்து பிரிந்து சீராக நிற்பது வக்கணித்தல் = விவரித்துரைத்தல் வக்கணை = பட்டப் பெயர், உபசாரப் பேச்சு, வருணனை, நாகரிகம், ஒழுங்கு, நிந்தைப்பேச்சு வக்காணம் = ஆலாபனம் வக்கிரகம் = மழைத்தடை வக்கிரம் = கொடுமை, கூன் வளைந்து போதல், மடங்குதல், வஞ்சனை, மீளுதல், வட்டம், வளைவு, பொய் வக்கிரன் = சனி, செவ்வாய் வக்கிராங்கம் = வளைந்தசரீரம் வக்கிராங்கி = கூனி வக்கிரித்தல் = திரும்புதல், கோணியிருத்தல், ஆலாபனம் செய்தல் வக்கு = வழி, வதங்குதல், தோல், வேகுகை வங்கணம் = நட்பு, காதல் வங்கம் = ஈயம், கப்பல், கத்தரி, வெள்ளி, ஒரு நாடு, அலை, வளைவு வங்கர் = சண்டாளர், வங்க தேசத்தார் வங்காரம் = பொன், உலோகக்கட்டி வங்கிசம் = வம்ஸம் வங்கியம் = இசைக் குழல், மூங்கில் வங்கு = புற்று, துளை, குகை, ஒரு வியாதி, போந்து, வளை வங்கூழ் = காற்று வசதி = இடம், வீடு, நகரம், இடச்சுகம், செளகரியம்